• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • போதும் போதும் என்கிற அளவிற்கு முடி வளர வேண்டுமா? செம்பருத்தி ஹேர் மாஸ்க் டிரை பண்ணி பாருங்க..!

போதும் போதும் என்கிற அளவிற்கு முடி வளர வேண்டுமா? செம்பருத்தி ஹேர் மாஸ்க் டிரை பண்ணி பாருங்க..!

செம்பருத்தி ஹேர் மாஸ்க்

செம்பருத்தி ஹேர் மாஸ்க்

செம்பருத்தி பூ கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும், பளபளப்பையும் கொடுக்கும்.

  • Share this:
செம்பருத்தி பூ அனைவரின் வீட்டு தோட்டங்களிலும் காணப்படும் ஒரு தாவரம் .  இந்த பூ கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்தையும், பளபளப்பையும் கொடுக்கும் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பல முடி பராமரிப்பு தயாரிப்புகளில் கூட செம்பருத்தி ஒரு மூலப்பொருளாக இருப்பதை நாம் காண்கிறோம். ஏனெனில், இது கூந்தலுக்கு அதிக ஊட்டமளிக்கிறது.

இருப்பினும், இந்த முடி பராமரிப்பு தயாரிப்புகளில் பெரும்பாலும் உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் கூடுதல் இரசாயனங்கள் உள்ளன. எனவே, தீங்கு விளைவிக்கும் பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக, செம்பருத்தி மலர்களை கொண்டு  ஹேர் மாஸ்குகளை வீட்டிலேயே சொந்தமாக DIY முறையில் தயாரித்து உபயோகிக்கலாம்.

அவை செய்வதற்கு எளிதாகவும், உங்கள் தலைமுடிக்கு முற்றிலும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். செம்பருத்தி பூ மற்றும் இலை இரண்டையும் உங்கள் தலை முடியில் அப்ளை செய்யலாம். இதனை தயாரிக்க பல வழிகள் இருக்கின்றன. எப்படி என்பதை பின்வருமாறு காணலாம்.



1. செம்பருத்தி ஹேர் மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ - தேவையான அளவு

செம்பருத்தி இலை - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை : பிரெஷாக பறித்த சில செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பூ இதழ்களை பிரித்து இதழ் மற்றும் இலைகளை மிக்சி ஜாரில் போட்டு  அரைக்கவும். தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்கவும்.

அந்த பேஸ்டை தலைமுடி வேரில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளுங்கள். பின்னர், தலைமுடியை கட்டி சுமார் 30- 40 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். இறுதியாக ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ச்சியாக செய்து வந்த பின்னர் உங்கள் கூந்தலில் மாற்றங்களை கண்கூடாக நீங்கள் காணலாம்.



2. செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்:

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூ - 6 முதல் 10
செம்பருத்தி இலைகள் - சில
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை : 6 முதல் 10 செம்பருத்தி பூ மற்றும் தேவையான செம்பருத்தி இலைகளை எடுத்து அவற்றை நன்கு கழுவி பின்னர் பூக்களின் இதழ்களை பிரித்தெடுக்க வேண்டும். இப்போது அவற்றை அரைத்து நன்றாக பேஸ்ட் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து சுமார் 3 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதனை சிறிது சூடாக்கவும். பின்னர், தேங்காய் எண்ணெய் குளிர்ந்தவுடன் அரைத்து வைத்த பேஸ்டை அத்துடன் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை உங்கள் கைகளை கொண்டு தலைமுடி வேர் முதல் நுனி வரை தடவவும். 30 முதல் 40 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். சிறந்த முடிவுகளை காண இதனை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.



3. செம்பருத்தி மற்றும் கற்றாழை ஜெல் மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூக்கள் - தேவையான அளவு
கற்றாழை ஜெல் - 1 கப்

செய்முறை : செம்பருத்தி பூக்களை பறித்து அதனை கழுவிய பின் இதழ்களை பிரிக்கவும். இப்போது, ​​இந்த இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டில் இருந்து ​​3-4 டீஸ்பூன் எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் வைத்து அதில் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இவை இரண்டும் சேர்ந்து மென்மையான பேஸ்ட் பதம் வரும் வரை கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் தடவவும். இப்போது, ​​உங்கள் தலைமுடியை ஒரு ஷவர் கேப் கொண்டு மூடி, ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர், அதை லேசான ஷாம்பூவுடன் கழுவவும், பின்னர் தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். சிறந்த முடிவுகளுக்காக இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.



4. செம்பருத்தி மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ - 8-10
தயிர் - 3-4 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
ரோஸ்மேரி எசென்ஷியல் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை : 8 முதல் 10 செம்பருத்தி பூக்களின் இதழ்களை கழுவி பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, இந்த பேஸ்ட்டில் தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். பின்னர் இந்த கலவையில் தேன் சேர்க்கவும். இப்போது, ​​ரோஸ்மேரி எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும். பின்னர், உங்கள் தலையை நன்றாக ஷாம்பூ கொண்டு அலசி பின்னர் காயவைத்து, பேஸ்டை உங்கள் தலைமுடியில் தடவுங்கள். 30 நிமிடம் உலர வைத்த பின்னர் ஒரு மைலடு ஷாம்பூ கொண்டு மீண்டும் தலையை அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை செய்யலாம்.

கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒரு ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே தயார் செய்து உபயோகித்து வாருங்கள் கட்டாயம் நல்ல பதில் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: