ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி…. அனைவரும் அடர்த்தியான முடிக்கு ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நீளமான அடர்த்தியான கூந்தல் பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், நமது வாழ்க்கை முறை இதற்கான சாத்தியத்தை குறைத்துவிட்டது.
கூந்தலின் அடர்த்திக்காக சந்தைகளில் பல்வேறு எண்ணெய்கள் கிடைக்கின்றது. ஆனால், அது சரியான பலனை கொடுப்பதில்லை. நீங்கள் உங்கள் தலைமுடியை இயற்கையான வழியில் ஆர்த்தியாக்க விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த டிப்ஸ் பற்றி கூறுகிறோம். இது உங்களின் கூந்தல் அடர்திக்கு நல்ல பலன் கொடுக்கும்.
செம்பருத்தி பூ காலம் காலமாக தலைமுடி மற்றும் முகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை நீங்கள் பெற விரும்பினால், செம்பருத்திப் பூ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்வை தடுக்க செம்பருத்தி பூவை வைத்து ஹேர் மாஸ்க் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
செம்பருத்தி பூ - 20.
தேங்காய் எண்ணெய் - அரை கப்.
செய்முறை :
முதலில் 4 கைப்பிடி அளவு செம்பருத்தி பூவை எடுத்து அதை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த பூக்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்போது, இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அரைக்கவும்.
இப்போது தலைமுடிக்கான ஹேர் மாஸ் தயார்.
Also Read | எண்ணெய் சருமத்தை எதிர்த்து போராட உதவும் சிறந்த 6 டிப்ஸ்கள் இங்கே.!
எப்படி பயன்படுத்துவது?
தயார் செய்து வைத்த செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்கை உங்கள் தலைமுடியில் தடவவும்.
அரை மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை சாதாரண தண்ணீர் கொண்டி கழுவவும்.
இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கவனிக்க வேண்டியவை :
தலைமுடிக்கு கலரிங், கேரட்டின் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை உங்கள் கூந்தலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் முடி உதிர்வை அதிகரிக்கும்.
தலைக்கு குளித்த உடனே சீப்பு பயன்படுத்துவத்தை தவிர்க்கவும். ஏனென்றால், இதுவும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
அதே போல, முடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கவும். அதே சமயம், தலை முடியை அடிக்கடி அழுத்தம் கொடுத்து சீவுவதை தவிர்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair growth, Hair loss, Hair Mask, Health tips