Vitamin C : உங்கள் சருமத்திற்கு வைட்டமின் சி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?

விட்டமின் சி

கோவிட் -19க்கு எதிரான மருத்துவத்துறையின் போராட்டத்திலும் வைட்டமின் சி ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக நம் உடலை பலப்படுத்தவும் உதவுகிறது

  • Share this:
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் துவங்கியதில் இருந்தே நம் உணவுகளில் வைட்டமின் சி-யை சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், வைட்டமின் சி-யானது இயற்கையாக உடலின்நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு பலப்படுத்துகிறது மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கிறது என்பதையும் பற்றி பல தகவல்களை நாம் அதிகம் பார்த்து வருகிறோம்.

வைட்டமின் சி என்பது திசுக்களை சரிசெய்வது முதல் பல்வேறு டிரான்ஸ்மிட்டர்களின் நொதி உற்பத்தியில் இன்றியமையாத ஊட்டச்சத்தாக இருக்கிறது. வைட்டமின் சி உண்மையில் நம் உடலில் இல்லாத ஒரு சத்து என்பதால் சப்ளிமெண்ட்ஸ் மூலமாகவோ அல்லது ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாகவோ மட்டுமே தேவையான வைட்டமின் சி-யை பெற முடியும். உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதை தவிர வயதாகும் அறிகுறிகளை குறைக்கவும், சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் ஒரு அற்புத மற்றும் அத்தியாவசிய அழகு ஊட்டச்சத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

வைட்டமின் சி-யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் நம் சருமத்தை பிரகாசமாகவும், இளமையாகவும் வைக்கின்றன. இது ஃப்ரீ ரேடிகல்களை அழிக்கவும், ஆரோக்கியமான சருமத்திற்கான திசு சரிசெய்தல் மற்றும் கொலாஜன் தொகுப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. நீங்கள் உங்கள் சரும பராமரிப்பிற்காக வாங்கும் ஸ்கின் கேர் தயாரிப்புகள் பெரும்பாலானவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் வைட்டமின் சி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான வைட்டமின் சி ஊட்டச்சத்தை அவர்கள் உண்ணும் உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பெறுகிறார்கள்.



கோவிட் -19க்கு எதிரான மருத்துவத்துறையின் போராட்டத்திலும் வைட்டமின் சி ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக நம் உடலை பலப்படுத்தவும் உதவுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். சரும பராமரிப்பை பொறுத்த வரை வைட்டமின் சி ஒரு தீவிரமான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. புற ஊதா வெளிப்பாட்டினால் ஏற்படும் ஃப்ரீ ரேடிகல்கள் சருமத்தை சேதப்படுத்தாமல் இது பாதுகாக்கிறது.

Belly Fat Reduce : தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சிடர் வினிகரை எப்போது குடிக்க வேண்டும்..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

வைட்டமின் சி ஆரோக்கியமான செல் மீளுருவாக்கத்திற்கு உதவி சூரிய கதிர்கள் மற்றும் கொலாஜன் இழப்பிலிருந்து ஏற்படும் சரும சேதத்தை சரிசெய்ய உதவுகிறது டார்க் ஸ்பாட்ஸ்களை திறம்பட குறைக்கிறது. வைட்டமின் சி அதிக அளவு உட்கொள்வது சருமத்தின் வறட்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. அஸ்கார்பிக் அமிலம் சருமத்தில் தண்ணீரைத் தக்க வைத்து, உலர்ந்த மற்றும் எண்ணெய் மிக்கதாக இருப்பதை தடுக்கிறது. சூரிய வெப்பத்தால் ஏற்படும் சரும சேதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் டல்லான சருமத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.



வயது மற்றும் சூரிய வெப்பம் காரணமாக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க, வடுக்களை மறைய செய்ய வைட்டமின் சி பெரிதும் பயன்படுகிறது. ஆரஞ்சு, ப்ரோக்கோலி போன்ற பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் வைட்டமின் சி ஊட்டச்சத்தானது ஆண்களுக்கு 90 மி.கி, பெண்களுக்கு 75 மி.கி என்ற அளவில் தினசரி தேவைப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

PCOD பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது..? பாலிவுட் பிரபலம் பகிர்ந்துகொண்ட அனுபவம்..!

சிறப்பான சரும அனுபவத்தை பெற சருமத்தை க்ளீன் செய்த பின்னர் மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன் வைட்டமின் சி சீரம் தயாரிப்பை பயன்படுத்தலாம். வைட்டமின் சி சீரம் சருமத்தை சூரிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் என்றாலும் இது ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதால் சன்ஸ்கிரீனையும் பயன்படுத்த வேண்டும். ஒரு கிரீம் அல்லது டோனரைக் காட்டிலும் வைட்டமின் சி சீரம் மிகவும் பயன் தர கூடியது.



வைட்டமின் சி தோல் பராமரிப்பு பொருட்களில் சீரம் தான் சிறந்தது என்றும் தோல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால் வைட்டமின் சி சீரம் மற்ற வைட்டமின் சி தோல் பராமரிப்பு தயாரிப்புகளை விட தோல் தடையை (skin barrier) ஊடுருவுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். நியாசினமைடு (niacinamide), கெமிக்கல் எக்ஸ்போலியண்ட்ஸ் (chemical exfoliants), ரெட்டினோல் (retinol) போன்ற பொருட்களை ஒன்றாக பயன்படுத்தக்கூடாது. நியாசினமைடுடன் கூடிய வைட்டமின் சி சீரம்கள் சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும், தவிர எக்ஸ்போலியன்ட்கள் ஸ்திரமின்மைக்கு காரணமாகின்றன.

 
Published by:Sivaranjani E
First published: