Home /News /lifestyle /

பொலிவான முகத்தை பெற ஆண்களுக்கான 4 ஸ்கின் கேர் டிப்ஸ்!

பொலிவான முகத்தை பெற ஆண்களுக்கான 4 ஸ்கின் கேர் டிப்ஸ்!

Skincare For Men

Skincare For Men

Men Skin Care | க்ளென்சிங் என்பது ஸ்கின் கேருக்கான முக்கியமான மற்றும் முதன்மையான ஒரு செயல் ஆகும்.

ஸ்கின் கேர் - முழுக்க முழுக்க பெண்களுக்கானது என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. சமீபகாலமாக ஆண்களும் ஸ்கின் கேர் மீது அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்துகின்றனர். ஸ்கின் கேர் என்பது ஒரு ஓய்வு நேர நடவடிக்கை அல்ல, அது சுய பராமரிப்பு மற்றும் சுய கவனிப்பின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை ஆண்களும் உணர்ந்து வருகின்றனர்.


நமது தோல் வெளிப்புற மேற்பரப்பில் உள்ள நம் உடலைப் பாதுகாக்கும் ஒரு கவசம் ஆகும், அதை நாம் நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஒருவேளை இதைப்பற்றியெல்லாம் பெரிதும் கவலை கொள்ளாத, முயற்சி செய்து பார்க்காத ஆண்களின் பட்டியலில் நீங்கள் இருந்தால், சில ஸ்கின் கேர் டிப்ஸ்களை தேடுகிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.


க்ளென்சிங்: க்ளென்சிங் என்பது ஸ்கின் கேருக்கான முக்கியமான மற்றும் முதன்மையான ஒரு செயல் ஆகும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதும், சுத்தம் செய்வது மிகவும் அவசியம். வாரத்திற்கு ஒருமுறை நல்ல ஸ்க்ரப் மூலம் உங்கள் சருமத்தை சுத்தம் செய்வது நல்லது.


ஷேவிங் டிப்ஸ்: ஆண்களின் தோலுக்கும் பெண்களின் தோலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு - முகத்தில் உள்ள முடி. எனவே தான் ஆண்கள் முகத்தில் உள்ள முடி மீதும் கவனம் செலுத்த வேண்டும், இதுவும் ஆண்களின் ஸ்கின் கேரில் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் ஷேவிங் மென்மையாக முடிய, உங்கள் தோல் அதற்கு நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஷேவிங் ஜெல்லைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் முகத்தில் உள்ள முடியை மென்மையாக்குகிறது. மீசை, தாடியின் வளர்ச்சியைத் தவிர்க்க, எப்போதும் முடி இருக்கும் திசையில் ஷேவ் செய்யுங்கள், முடிக்கு எதிரான திசையில் ஷேவ் செய்வதை தவிர்க்கவும். மேலும் ஷேவ் செய்த பிறகு சருமத்திற்கு சிறிது ஈரப்பதம் கொடுக்க மறக்க வேண்டாம், அதாவது ஆஃப்டர் ஷேவ்வை பயன்படுத்தவும். முடிந்தவரை ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட ஆஃப்டர் ஷேவ்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் ரேஸர் பர்ன்களை (razor burns) காயப்படுத்தலாம்.


சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீன்கள் - மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் ஸ்கின் கேர் பொருட்களில் ஒன்றாகும். நம்மில் பலர் சூரிய ஒளியின் கீழ் இருக்கும்போது மட்டுமே சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் புற ஊதா கதிர்கள் ஜன்னல்கள், கதவுகள் வழியாக வந்தும் உங்களைப் பாதிக்கும் என்பதால் நீங்கள் வீட்டிற்குள் இருக்கும்போது கூட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். முகம், கழுத்து மற்றும் காது பகுதிகளில் எஸ்பிஎஃப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.


தோல் வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை தேர்வு செய்யவும்: பெரும்பாலான ஆண்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கின் கேர் பொருட்களைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை, இது தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே முகப்பரு, 'ரெட்னஸ்' போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் தோல் வகைக்கு ஏற்ப தயாரிப்புகளை வாங்குங்கள்.. மேற்கண்ட ஸ்கின் கேர் அறிவுரைகளானது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது தவிர, நீங்கள் உண்ணும் உணவின் மீதும் கவனம் செலுத்தலாம், உங்கள் சருமத்திற்கு கூடுதல் அழகை சேர்க்க ஃபேஸ் பேக்குகள் மற்றும் மாஸ்க்குகளை கூட நீங்கள் முயற்சிக்கலாம்.


 
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Skin Care

அடுத்த செய்தி