Home /News /lifestyle /

மேக்அப் போடுவதால் முகத்தில் வரக்கூடிய முகப்பருக்களை எப்படி தடுப்பது?

மேக்அப் போடுவதால் முகத்தில் வரக்கூடிய முகப்பருக்களை எப்படி தடுப்பது?

பெண் குயின் கார்னர் | முகப்பரு

பெண் குயின் கார்னர் | முகப்பரு

Acne Prevention Tips | நீங்கள் மேக் அப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு பருக்கள் போன்றவற்றின் பாதிப்புகள் வராமல் இருக்க சில வழிகளை செய்து வந்தால் போதும் என்று அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முக அழகை பராமரிக்க பல வழிகளை செய்து வருவோம். அதே போன்று முகத்தை இரு மடங்கு அழகாக தோற்றம் தருவதற்கு பல வகையான மேக் அப் புராடக்ட்களை பயன்படுத்துவோம். இவற்றில் பல, முகத்தை அழகாக காட்டுவதோடு நமது முகத்தை மோசமானதாகவும் மாற்றி விடுகிறது. அதாவது அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நமது முகத்தை அழகாக காட்டி விட்டு, அதன் பிறகு பல வகையான பாதிப்புகளை முகத்தில் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கீறல்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும் சருமத்தின் ஆரோக்கியமும் இதனால் கெடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்த கூடிய புராடக்ட்களில் இருக்க கூடிய கெமிக்கல்கள் தான். இந்த வகையான வேதி பொருட்கள் நமது தோலின் தன்மையை மாற்ற கூடியதாக உள்ளது. நீங்கள் மேக் அப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு பருக்கள் போன்றவற்றின் பாதிப்புகள் வராமல் இருக்க சில வழிகளை செய்து வந்தால் போதும் என்று அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

சிறந்த ப்ராடக்ட்கள்:

பொதுவாக நாம் மேக் அப் போடுவதற்கு வாங்க கூடிய பல ப்ராடக்ட்களில் ஏராளமான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வாங்க கூடிய புராடக்ட்களில் உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது என்பதை முதலில் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஒவ்வொரு வகையான ப்ராடக்ட்கள் உள்ளன. மேலும் தாதுக்கள் கொண்ட ப்ராடக்ட்களை தேர்வு செய்தால் பருக்களை தடுக்கலாம்.



மேக் அப் :

பலர் செய்கின்ற தவறுகளில் ஒன்று மேக் அப் போட்டுவிட்டு அதை அப்படியே விட்டுவிடுவது. பொதுவாக தூங்க போவதற்கு முன் எல்லா மேக் அப்பையும் கலைத்து விட்டு தூங்குவது தான் நல்லது. இதில் கண்களுக்கு போடப்படும் மேக் அப் கூட அடங்கும். இவற்றை நீக்கவில்லை என்றால் பல வித பாதிப்புகள் சருமத்தில் ஏற்படும். குறிப்பாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தழும்புகள் போன்றவை வர கூடும்.

Also Read : பருவ நிலைக்கு ஏற்ப சருமப் பராமரிப்புகளையும் ஏன் மாற்ற வேண்டும்..?

மேக் அப் பொருட்கள் :

மேக் அப் போடுவதற்கு பயன்படுத்த கூடிய பிரஷ் மற்றும் ஸ்பான்ஞ் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு முறை மேக் அப் போட்ட பிறகும் அவற்றை சுத்தம் செய்து வைத்து விடுங்கள். மேலும் உங்களின் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜை பிறருடன் பகிராமல் இருப்பது நல்லது. இல்லையேல் இது உங்கள் முகத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடும்.



சிறந்த முறை :

மேக் அப் என்றாலே அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்கிற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. ஆனால், இது உண்மை அல்ல. மிதமான அளவில் மேக் அப் போட்டிருந்தாலும் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். எனவே அதிக அளவில் மேக் அப்பை முகத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இது உங்கள் சருமத்தை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Makeup, Skin Care

அடுத்த செய்தி