Home /News /lifestyle /

உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூ எது? மருத்துவர்கள் கூறும் சிறந்த ஆலோசனைகள் இதோ..

உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூ எது? மருத்துவர்கள் கூறும் சிறந்த ஆலோசனைகள் இதோ..

ஹேர் கேர் டிப்ஸ்

ஹேர் கேர் டிப்ஸ்

Hair Care | நமது வாழ்வியல் சூழல் மாற்றத்தால் முடி கொட்டும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை குறைப்பதற்கு நல்ல ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தலை முடியில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக ஏராளமான ஷாம்பூக்கள் சந்தையில் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையான முடிக்கு ஏற்றதாக இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிலரின் முடி மிகவும் வழவழப்பாக இருக்கும், சிலருக்கு முடியின் தன்மை மிக வறட்சியாக இருக்கும், அதே போன்று சிலருக்கு தலையில் பொடுகு தொல்லை இருக்கும். இப்படி ஒவ்வொருவரின் முடியின் தன்மைக்கும் ஒவ்வொரு ஷாம்புக்கள் உள்ளன. இந்த பதிவில் இவற்றை பற்றி மருத்துவர்கள் கூறும் சிறந்த ஆலோசனைகளை பற்றி தெளிவாக பார்ப்போம்.

ஷாம்பு வகைகள்:

இன்று நாம் பயன்படுத்த கூடிய பல ஷாம்புக்களை அவற்றின் சரியான பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்கி விடுகிறோம். குறிப்பாக தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டும் எல்லா வகையான ஷாம்பூக்களையும் நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். இது முடியின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்கும் என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவரின் முடி பிரச்சனைக்கும் தனித்தனி வகையான ஷாம்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினாலே எந்த பாதிப்பும் முடிக்கு வராது.

பொடுகு தொல்லை:

தலையில் பொடுகு தொல்லை உள்ளவர்கள் ஜிங்க் பைரிதியோன் அல்லது 2% கெட்டோகனசோல் போன்ற மூலப்பொருட்கள் உள்ள ஷாம்புகளைப் பயன்படுத்தவும். இந்த ஷாம்பூவை சிறிதளவு கையில் எடுத்து கொண்டு தலையில் தேய்த்து கொள்ளுங்கள். இதை அப்படியே 15 நிமிடம் வைத்துவிட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதால் மிக சீக்கிரத்தில் பொடுகு தொல்லை நீங்கி விடும். இதன் பிறகும் பொடுகு தொல்லை இருந்தால் தோல் மருத்துவரை ஆலோசியுங்கள்.



முடி உதிர்வு:

நமது வாழ்வியல் சூழல் மாற்றத்தால் முடி கொட்டும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை குறைப்பதற்கு நல்ல ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். மேலும் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்னை விரைவில் குறைந்து விடும்.

Also Read: பளபளக்கும் கூந்தல் வேண்டுமா.? அப்போ இதை ரிவர்ஸில் செய்யுங்கள்! 

பஞ்சு போன்ற முடி:

சிலருக்கு வழவழப்பான முடி இருக்கும், அதுவே சிலருக்கு பஞ்சு போன்ற முடி இருக்கும். இவற்றில் பஞ்சு போன்ற முடி இருப்பவர்களின் தலையை பராமரிப்பது அந்த அளவிற்கு எளிதல்ல. இதற்கு புரோட்டீன் உள்ள ஷாம்பு பயன்படுத்த வேண்டும். மற்றும் சல்பேட் போன்ற கெமிக்கல் நீங்கள் வாங்க கூடிய ஷாம்பூவில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.



ஸ்ட்ரைட் ஹேர்:

சிலர் ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்திருப்பார்கள். எனவே எந்த வகையான ஷாம்பு பயன்படுத்துவது என்பது பெரும் குழப்பமாக இருக்கும். இதற்காக சந்தையில் சில வகையான ஷாம்புக்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவது நல்லது. மேலும் நல்ல கண்டிஷனரை பயன்படுத்தவதும் அவசியம். அனால் இதை வேர்களில் தடவ வேண்டாம். மேலும் ஆலிவ் ஆயில், ஜோஜோபா ஆயில், வைட்டமின் இ, அவகேடோ, தேங்காய் எண்ணெய் ஆகிய மூலப்பொருட்கள் கொண்ட சீரம்களை பயன்படுத்தலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Hair care, Hair Conditioner, Shampoo

அடுத்த செய்தி