Home /News /lifestyle /

சருமத்தை இயற்கையான முறயில் பொலிவாக்க உதவும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்...

சருமத்தை இயற்கையான முறயில் பொலிவாக்க உதவும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்...

Face Mask

Face Mask

Facial Mask | ஃபேஷியல் மாஸ்க்ஸ் என்பவை சில நிமிடங்களில் ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கான எளிதான வழிகளில் ஒன்றாக இருக்கின்றன. இவை வெவ்வேறு தோல் மற்றும் வயது வகைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்கின் போர்ஸ்களை சுத்தப்படுத்துகின்றன, வறண்ட மற்றும் நீரிழப்பு சரும வகைகளுக்கு ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை தருகிறது, சீரான தோல் நிறத்தை அளிக்கிறது. மார்க்கெட்களில் பயன்படுத்தத் தயாராக இருக்கும் இன்ஸ்டன்ட் ஃபேஷியல் மாஸ்க்குகள் இருக்கலாம். ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேஷியல் மாஸ்க்ஸ் எப்போதும் இயற்கையானது மற்றும் பல நன்மைகளை கொண்டுள்ளது.

பிரபல தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா தனது இன்ஸ்டாவில், சரியாக தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் நம் சருமத்தில் நன்றாக வேலை செய்யும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டே இரண்டு மூலப்பொருளை மட்டுமே கொண்ட ஃபேஸ் மாஸ்க் ரெசிபியை ஷேர் செய்துள்ள டாக்டர் கீதிகா, இந்த ஃபேஸ் மாஸ்க் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்குகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாவில் கூறி இருக்கும் கீதிகா, ஒரு இன்ஸ்டன்ட் பிரைட்னஸ் எஃபெக்டிற்காக நான் பயன்படுத்தும் ஒரு சூப்பர் ரெசிபி Coffee and raw honey pack ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது? இது எளிதானது மற்றும் 2 பொருட்கள் மட்டுமே தேவை..



 




View this post on Instagram





 

A post shared by Dr Geetika Mittal Gupta (@drgeetika)






ஹோம் மேட் ஃபேஸ் மாஸ்க்கிற்கு தேவையான 2 பொருட்கள் :

* காபி பவுடர் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

காபி பவுடர் மற்றும் தேன் ஆகிய 2 பொருட்களையும் கலந்து, கலவையை முகம் முழுவதும் நன்றாக தடவவும் என்று குறிப்பிட்டு உள்ளார் கீதிகா மிட்டல். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு அளிக்கும் நன்மைகளைப் பகிர்ந்து கொண்ட நிபுணர் கீதிகா, காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் உள்ளன. இவை கரு வளையங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் முகப்பரு புள்ளிகளை குறைக்க உதவுகின்றன. இந்த பேக்கில் கலக்கப்பட்டுள்ள காபி பவுடர் பிரகாசமான, களங்கமற்ற மற்றும் எரிச்சல் இல்லாத சருமத்தை வழங்குவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. புற ஊதா கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கும் இந்த மூலப்பொருள் அதிசயங்களை செய்கிறது என்று கூறியுள்ளார்.

Also Read : உங்கள் கன்னம் பளபளப்பாக மாறுவதற்கு பப்பாளி மற்றும் கற்றாழை மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள்.!

அதே போல குறிப்பாக தேன் (Raw honey), பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது பாக்டீரியாவை கட்டுக்குள் வைத்து முகப்பருவை குறைக்க உதவுகிறது. தேனில் உள்ள குளுக்கோனிக் ஆசிட் மற்றும் பிற ஆல்பா-ஹைட்ராக்ஸி ஆசிட்களும் உள்ளன. இவை இறந்த சரும செல்களை நீக்குகின்றன. சருமத்தில் இருக்கும் லேசான காயங்களை கூட குணப்படுத்துகிறது.

Also Read : முகத்துக்கு ஃப்ளீச் செய்யும் பழக்கம் இருக்கா..? அப்ப மறக்காமல் இத ஃபாலோ பண்ணிடுங்க..!

மொத்தத்தில் இந்த காபி பவுடர் மற்றும் தேன் பேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கையாகவே சருமத்தைப் பொலிவாக்குகிறது என்று கூறி பதிவை முடித்துள்ளார் தோல் மருத்துவர் கீதிகா மிட்டல்.
Published by:Selvi M
First published:

Tags: Face mask, Skin Care

அடுத்த செய்தி