• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆரோக்கியமான சருமத்தை பெற இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ்!

ஆரோக்கியமான சருமத்தை பெற இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

சீரான இரத்த ஓட்டத்திற்கு மசாஜ்கள் சிறந்த வழியாகும். உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் 10-15 நிமிடங்கள் வரை தினமும் மசாஜ் செய்யலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நம் சருமம் அழகாகவும், பொலிவாகவும் இருக்க நாம் எந்தெந்த சரும தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். ஆனால் நம் சருமத்தை உள்ளே இருந்து குணப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதில் நாம் கவனம் செலுத்தினால் தசைகள் ஆரோக்கியமடையும். இது உங்கள் சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனென்றால், உங்கள் உடலின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிக்கு இரத்தம் சீராக செல்லும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமத்திற்கு ஒரு பிரகாசத்தை வழங்குகிறது.

தோல் மருத்துவரான டாக்டர் கீதிகா மிட்டல் சமீபத்தில் இதுகுறித்து தெளிவாக விளக்கினார், அதில் சில உதவிக்குறிப்புகளை குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நல்லது. எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் வழிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.,

1. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் சருமத்தில் அதிசயங்களை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே!. உடற்பயிற்சி இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி சருமம் பொலிவாகிறது. வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை வாரத்திற்கு ஐந்து நாட்களாவது குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் செய்து வந்தால் உங்கள் சரும ஆரோக்கியம் மேம்படும்.

2. நீரேற்றமாக இருங்கள் :

நீரேற்றமாக இருப்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக கோடை காலத்தில் நமது உடலில் இருந்து வெளியேறும் நீர் இழப்பை ஈடு செய்ய போதுமான அளவு நீர் சத்தை பெறுவது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள் என ஒவ்வொரு தோல் நிபுணரும் பரிந்துரைக்கின்றனர். நீர் சத்தை தண்ணீர் மூலம் மட்டுமின்றி இளநீர், நுங்கு, பழ ஜூஸ் என எடுத்து கொள்ளலாம்.

3. ஆரோக்கிய உணவை சாப்பிடுங்கள்

உங்கள் தினசரி உணவு பட்டியலில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, அதிகளவிலான உப்பு ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதற்கு மாற்றாக உங்கள் உணவில் சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றால் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

4. மசாஜ் செய்யவும் :

சீரான இரத்த ஓட்டத்திற்கு மசாஜ்கள் சிறந்த வழியாகும். உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் 10-15 நிமிடங்கள் வரை தினமும் மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதை மேம்படுத்துகிறது. உங்களுக்கு பிடித்த குவா ஷா அல்லது ஜேட் ரோலரை எடுத்து, பேஸ் ஆயிலை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Also read... உங்கள் பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

5. க்ரீன் டீ

கிரீன் டீயில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஓட உதவுபவை. இதனால் ரத்த ஓட்டம் சீராக்கும். எனவே, தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும அழகும் மேம்படும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: