தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் ஹேர் பேக்: வாரம் ஒரு முறை இதை தடவுங்க போதும்

வாரம் ஒரு முறை தடவி தலைக்குக் குளிக்க அடர்த்தியான தலைமுடியைப் பெறலாம். முடி கொட்டுவதும் குறையும்.

தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் ஹேர் பேக்: வாரம் ஒரு முறை இதை தடவுங்க போதும்
மாதிரி படம்
  • Share this:
முடி கொட்டுவதால் தலைமுடி அடர்த்தி குறைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா..? அப்போ இந்த இயற்கை ஹெர்பல் பேக் ஐ செய்து வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தடவி தலைக்குக் குளிக்க அடர்த்தியான தலைமுடியைப் பெறலாம். முடி கொட்டுவதும் குறையும்.

தேவையான பொருட்கள் :

திரிபலா - 3


பெரிய நெல்லிக்காய் - 4
தான்றிக்காய் - 3
தயிர் - 1 கப்கற்றாழை ஜெல் - 2 tbsp
தேங்காய் எண்ணெய் - 1 tbspசெய்முறை :

திரிபலா மற்றும் தான்றிக்காயை பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். இவை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் பொடியாகவும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு பொடிகளையும் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். பின் தயிரை தண்ணீரே இல்லாமல் வடிகட்டியில் வடித்துக்கொள்ளுங்கள். தயிரில் முற்றிலும் தண்ணீர் இறுகியவுடன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

உருளைக் கிழங்கைப் பயன்படுத்தி சரும அழகை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் தெரியுமா..?

அடுத்ததாக கற்றாழையில் உள்ள சதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது அனைத்தையும் ஒன்றாக இரு பவுளில் போட்டு நன்குக் கலக்க கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வரும். மிக்ஸியில் கூட அரைத்துக்கொள்ளுங்கள்.

இதில் எந்தவித தண்ணீரும் ஊற்றக் கூடாது. அப்படியே டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்.

வாரம் ஒரு முறை தலைக்குக் குளிக்கும் முன் தலைமுடி வேர்களில் படும்படி தடவிக்கொள்ளுங்கள். பின்பு அவை காய்ந்ததும் தலைக்குக் குளியுங்கள். இவ்வாறு செய்து வர நல்ல பலன்க் கிடைக்கும்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading