ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சருமத்தை பொலிவாக்க வைரலாகும் 'ஸ்கின் சைக்ளிங்’ டிப்ஸ்... உடனே ரிசல்ட் தெரியுதாம்..!

சருமத்தை பொலிவாக்க வைரலாகும் 'ஸ்கின் சைக்ளிங்’ டிப்ஸ்... உடனே ரிசல்ட் தெரியுதாம்..!

ஸ்கின் சைக்ளிங்

ஸ்கின் சைக்ளிங்

தொடர்ந்து நான்கு நாள்கள் இரவில் தோல் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். இது சரும அமைப்பை சமன் செய்யவும் மற்றும் முகப்பருக்களை அழிக்கவும் உதவியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சருமம் என்பது எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது அனைவருக்கும் இயல்பான ஒன்று தான். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் எப்போதுமே தங்களது முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காகவே சந்தைகளில் விலையுயர்ந்த அழகுசாதனப் பொருள்கள் விற்பனையாகின்றது. இருந்தப்போதும் பலரால் சருமத்தைப் பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்.

குறிப்பாக பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் காலையில் முகத்தைப் பராமரிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதுப்போன்ற சூழலில் தான் சமீப காலங்களாக மக்களிடம் பிரபலமாகியுள்ளது ஸ்கின் சைக்கிளிங் எனப்படும் தோல் பராமரிப்பு. தொடர்ந்து நான்கு நாள்கள் இரவில் தோல் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். இது சரும அமைப்பை சமன் செய்யவும் மற்றும் முகப்பருக்களை அழிக்கவும் உதவியாக உள்ளது. எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

பெண்களிடம் பிரபலமாகியுள்ள ஸ்கின் சைக்கிளிங்...

சரும பராமரிப்பை மேற்கொள்வதற்கு நீங்கள் ஸ்கின் சைக்கிளிங்கை உபயோகிக்கலாம். முதல் நாள் எக்ஸ்ஃபோலியட் (exfoliate), இரண்டாம் நாள் ரெட்டினாய்டுகள் (retinoid) , மூன்றாம் மற்றும் நான்காம் நாள் மாய்ஸ்சரைசர் (moisturise) மற்றும் மீண்டும் இந்த இந்த முறையைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

நீங்கள் இந்த சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) செய்யும் போது சரும வெடிப்பு, முகப்பு தழும்புகளைத் தடுப்பதுடன் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்கிறது. எனவே இதை நீங்கள் முதல் நாள் இரவில் செய்ய வேண்டும்.இதனையடுத்து முன்பே கூறியது போல் இரண்டாம் நாள், ரெட்டினாய்டுகள். இது முகப்பருக்களை எதிர்த்துப்போராட உதவுகிறது.

Also Read : பால் பொருட்கள் சருமத்திற்கு எதிரியா..? நிபுணர்கள் தரும் விளக்கம்..!

சருமத் துளைகள் அடைக்கும் போக்கைக் குறைக்கிறது. அடுத்ததாக உள்ள இரண்டு நாள்களில் மாய்ஸ்சரைசர். இது சருமத்தை மிருதுவாக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது. இந்த நடைமுறை தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பிரபல தோல் மருத்துவர்கள் தெரிவிக்கையில், இந்த நடைமுறை நெகிழ்வான முறையில் இருக்க வேண்டும். அதாவது குளிர்காலம் மற்றும் வெயில்காலத்தில் உங்களது சருமத்தின் பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக இருக்கும்.

எனவே அதற்கேற்றால் போல் சில மாற்றங்களை இந்த தோல் பராமரிப்பில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.இதோடு நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அதாவது உங்களது தோல் ஏற்கனவே கடுமையான தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த வழக்கம் பயனுள்ளதாக இருக்காது. இருப்பினும், நீங்கள் செயலில் உள்ள தோல் பராமரிப்பு தயாரிப்புகளைப் பற்றி ஆராய்வதில் தொடக்கநிலையாளராக இருந்தால், நீங்கள் தொடங்குவதற்கு இந்த வழக்கம் ஏற்றதாக இருக்கும். இருந்தாலும் உங்களின் சருமத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? சரும பராமரிப்பிற்கான அழகுசாதனப் பொருள்களை உபயோகித்தால் பிரச்சனை வருமா? என்பது குறித்து தோல் நிபுணர்களிடம் கேட்டுக்கொள்வது சிறந்தது.

First published:

Tags: Skincare