ஜெனிஃபர் லோபஸ் முதல் பிரியங்கா சோப்ரா வரை... புத்தாண்டில் ஜொலிக்க நடிகைகளின் அசர வைக்கும் மேக்அப் டிப்ஸ்

ஐ மேக்அப்

நடிகைகளின் ஸ்டைலை பின்பற்றி புத்தாண்டு அன்று உங்களை நீங்கள் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.

  • Share this:
பலரும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்கு கொடுப்பதில்லை. பெண்கள், தங்களின் கண்களை ஐ லைனரால் மெருகூட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும், அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். பல வகைகளில் ஐ லைனர்கள் இருந்தாலும் அதனை எப்படி பயன்படுத்துவது என்றும் சிலருக்கு தெரிவதில்லை.அதனால், பேஷன் ஷோக்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமான நடிகைகள் செய்து வரும் மேக்கப்களை பின்பற்றுவார்கள். அந்த வகையில் சில நடிகைகளின் ஸ்டைலை பின்பற்றி புத்தாண்டு அன்று உங்களை நீங்கள் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.

ஜெனிஃபர் லோபஸ்(Jennifer Lopez) ஸ்டைல்

புத்தாண்டு அன்று நீங்கள் ஜொலிக்க வேண்டுமென்றால் கிராஃபிக் ஐ லைனரை பயன்படுத்துங்கள். பெண்களுக்கென்றே பல்வேறு ஷேட்களில் புதிய புதிய ஐ லைனர்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், உங்களுக்கு பிடித்தமான கலரை தேர்வு செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோஃபஸ் (Jennifer Lopez) ஸ்டைலை பின்பற்ற நினைத்தால், கண் புருவத்தின் மீது கிராஃபிக் லைனரை அப்ளை செய்து டிரையாக விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதன் மீது பளபளப்புக்காக Glitters- ஐ அப்ளை செய்யுங்கள். உங்கள் கண்கள் ஜொலிக்கும். 
View this post on Instagram

 

A post shared by Mary Phillips (@maryphillips)


கைலி ஜென்னர் (kyliejenner) ஸ்டைல் 
View this post on Instagram

 

A post shared by Kylie 🤍 (@kyliejenner)


உங்கள் கண்கள் மிளிர வேண்டும் என்று நினைத்தால் கைலி ஜென்னரின் ( kyliejenner) மிகஸ்டு கலர் ஐ லைனர் ஆப்சனை பயன்படுத்தலாம். வறட்சியான முகம் அமைப்பை கொண்டவர்களுக்கு இந்த ஸ்டைல் மிகவும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கைலி ஜென்னர், மஞ்சள் மற்றும் பிங்க் கலர் கலந்த கலவையை கண்களுக்கு ஐலைனராக பயன்படுத்தி, உதடுகளுக்கு நியூட் லிப் கலரை பயன்படுத்தியுள்ளார். இது உங்கள் தோற்றத்துக்கு பேலன்ஸைக் கொடுக்கும். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும்

கிம் கே ஸ்டைலிஷ் லுக் ( Kim K’) 
View this post on Instagram

 

A post shared by Kim Kardashian West (@kimkardashian)


பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும் கிம் கே வின் இந்த ஸ்டைலையும் நீங்கள் புத்தாண்டு அன்று முயற்சி செய்து பார்க்கலாம். புல்லாங்குழல் போன்று கண் இமைகள் இருக்கின்றன. அதற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் கொடுத்திருக்கிறார். நியூட் லிப் ஸ்டிக் ஷேடுடன் ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூவையும் மிக்ஸ் செய்து அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அவரின் கண்கள் பார்ப்பவர்களை சொக்கவைக்கிறது. இந்த ஸ்டைல் உங்களுக்கு பிடித்திருந்தால், இதனை டிரை பண்ணுங்க. சூப்பராக இருக்கும்.

பிரியங்கா சோப்ராவின் கோல்டன் Eye style 
View this post on Instagram

 

A post shared by Mary Phillips (@maryphillips)


பிரியங்கா சோப்ராவின் கோல்டன் Eye style உங்களை நிச்சயம் அழகாக காட்டும். ஒரே மாதிரியான கருப்பு ஆடைகள் அல்லது வேறொரு கலரில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்தீர்கள் என்றால் இந்த ஸ்டைல் உங்களின் personality வேறொரு லெவலில் எடுத்துக் காட்டும். பளபளப்பான ஐ ஷேடோவைப் பயன்படுத்தும்போது eye shadow primer- ஐ பயன்படுத்துங்கள். இயல்பாகவும் இருக்கும், அதேபோல் உங்களின் தோற்றத்தை மிகவும் காஸ்டிலியாகவும் (Costly look) காட்டும்

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: