பார்ட்டி, கெட்டுகெதர், திருமணம் போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது நம்மை அழகாகக் காட்ட மேக்அப் யுத்திகளைக் கையாள்வது வழக்கம்.
அதில் ஒன்றான தலைமுடியை அழகாகக் காட்டுவதற்காக பலரும் இன்று ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் கர்லர் பயன்படுத்துகின்றனர். இது சுருளாக இருக்கும் முடியை நேராகவும், நேராக இருக்கும் முடியை சுருளாகவும் மாற்றிக்கொள்ள இந்த கருவிகள் பயன்படுகின்றன.
இப்படி இயற்கையான முடி தோற்றத்தை தற்காலிகமாக மாற்றி அமைத்து அழகாகக் காட்டும் இந்தக் கருவிகளை பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகளும் உண்டாகின்றன.
இந்தக் கருவிகளை மின்சாரம் மூலம் சூடாக்கி அந்த சூட்டிலேயே தலைமுடியை பிடித்தவாறு மாற்றிக் கொள்வதால் உங்களின் இயற்கையான முடி அமைப்பை இழக்க நேரிட்டு இன்னும் மோசமான தோற்றத்தைப் பெறும். பின் இந்த கருவிகளைப் பயன்படுத்தாமல் வெளியே செல்லமுடியாதபடி முடி பொலிவிழந்துவிடும். இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதையும் சந்திக்கலாம்.
அதோடு தலைமுடியில் இயற்கையாக இருக்கும் கெராட்டின் புரோட்டின் மற்றும் ஹைட்ரஜன் பாண்ட் ஆகியவற்றை பாதிக்கும். இதனால் இயற்கையாக வடியும் எண்ணெய், ஊட்டச்சத்துகளை வெப்பம் இழுத்து வேர்களை வறட்சியாக்கும்.
தலைமுடிக் கருவி பயன்பாடு முடிகளின் நுனியை வெடிப்பு வெடிப்புகளாக மாற்றும். இதனால் முடி வளர்ச்சி தடைபடும். இதற்கு நீங்கள் முடியை வெட்டுவதே தீர்வாக அமையும். இன்னும் மோசமான வகையில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ள உதாரணங்களும் உள்ளன.
அதாவது இந்த கருவிகளை பிராண்டட் அல்லாமல் குறைந்த விலையில் வாங்கினாலோ அல்லது பிரண்டடாக இருந்தாலும் அது சரியாக தயாரிக்கப்படவில்லை என்றாலும், சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்றாலும் தலைமுடி பொசுங்கும் ஆபத்தை சந்திக்க நேரிடும். கவனக் குறைபாட்டுடன் இந்தக் கருவிகளை பயன்படுத்தினாலும் பொசுங்கும். எனவே எப்போது வேண்டுமானாலும் இதனால் ஆபத்தே அன்றி நன்மைகள் என்பது மிகக் குறைவுதான்.
இதற்கு சிறந்த மாற்று ஹேர் ரோலர்கள்தான். இந்தக் கருவிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இந்த ஹேர் ரோலர்கள்தான் தலையில் சுருள் சுருளாகச் சுற்றி பயன்படுத்தப்பட்டது. அதோடு தலைமுடியை சரியான முறையில் பராமரித்து, ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டாலே பொலிவான அழகான தலைமுடியைப் பெறலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.