கறிவேப்பிலையின் நன்மைகளை பற்றி பேசினா ஒரு புத்தகமே எழுதலாம். அதனால்தான் என்னவோ நம் தினசரி சமையலில் கறிவேப்பிலை கட்டாயம் இடம் பெறுகிறது. இப்படி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமக்கு நன்மை தரும் கறிவேப்பிலை அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
அதை நிரூபிக்கும் விதமாக ஆயுர்வேத நிபுணர் தீக்ஷா கறிவேப்பிலையின் நன்மை குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் கறிவேப்பிலையை முடி பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.
இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் தலைமுடி பிரச்சனையும் ஒன்று. முடி கொட்டுதல், இளம் வயதில் நரை முடி, வழுக்கை, முடி உடைதல் என தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் பலவற்றை அனுபவிக்கின்றனர். அதற்கு கறிவேப்பிலையில் சிறந்த மருத்துவம் இருக்கிறது.
நரை முடி மற்றும் முடி உதிர்வு பிரச்சனைக்கு...
தேங்காய் எண்ணெய் 1-2 கப் எடுத்துக்கொள்ளுங்கள். பின் கையளவு கறிவேப்பிலை எடுத்துக்கொள்ளுங்கள்.இதோடு ஒரு நெல்லிக்காய் இருந்தால் சேர்க்கலாம். இல்லையெனில் கறிவேப்பிலை மட்டுமே போதுமானது.
இவை இரண்டையும் நன்கு சிறு தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள். எண்ணெய் நிறம் மாறும் வரை கொதிக்க வேண்டும். கறிவேப்பிலை கருமையாக மாற வேண்டும். நன்கு கொதித்ததும் அதை ஆற வைத்து பின் வடிகட்டிக்கொள்ளுங்கள்.
View this post on Instagram
பிறகு தலைமுடியை ஒவ்வொரு பகுதியாக எடுத்து வேர்களில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர முடி கொட்டுவது குறையும்.
Also Read : நீளமான கூந்தல் வேண்டுமா? வீட்டில் நீங்களே செய்யலாம் ’முட்டை ஹேர் மாஸ்க்ஸ்’ - ட்ரை பண்ணிப் பாருங்க!
பொடுகு தொல்லை மற்றும் பேன் இருந்தால் ஒழிய தீக்ஷா தரும் டிப்ஸ் :
உங்கள் தலைமுடிக்கு தேவையான கறிவேப்பிலையை மோர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் மைய அரைக்க வேண்டும். பின் அதை வேர்களில் படும்படு தடவி காய்ந்து கொட்டும் வரை ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீர் அலசிவிட வேண்டும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Curry leaves, Dandruff, Hair fall