Home /News /lifestyle /

முடி வளர்ச்சியை அதிகரிக்க டிரெண்டாகும் ஹேர் டஸ்டிங் முறை : முழுமையான தகவல் இங்கே...

முடி வளர்ச்சியை அதிகரிக்க டிரெண்டாகும் ஹேர் டஸ்டிங் முறை : முழுமையான தகவல் இங்கே...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Hair Care | முடி நன்றாக இருந்தாலும் அதிக முடி பிளவுகளைக் கொண்டிருந்தால் அதனை அடிக்கடி சரி செய்ய வேண்டும், மிகவும் அடர்த்தியான மற்றும் சுருட்டை முடிக்கு ஹேர் டஸ்டிங் செய்வது மிகவும் கடினம் என்றும் கூறுகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தலைமுடி ஆரோக்கியத்துடன் நீளமாக வளர்வதற்கு ஹேர் டஸ்டிங் தொழில்நுட்பம் ( Hair duting) உதவியாக உள்ளது என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் உங்களது வாழ்க்கை முறையில் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்று.

பெண்களுக்கு நீளமான தலைமுடி தான் அழகு என்பார்கள். அதே சமயம் நீளமாக முடியைப் பராமரிப்பது என்பது அனைவருக்கும் சவாலான விஷயம். முடியை வெட்டினால் வளராமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் ஆரோக்கியமற்ற முடி அதாவது முடி சிறிது பிளவுபட்டிருந்தாலும் வெட்ட மாட்டார்கள். இதனால் மற்ற முடிகளும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

இதுப்போன்ற சூழலில் தான் அழகுக்கலை நிபுணர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஹேர் டஸ்டிங் தொழில்நுட்பத்தைப் ( Hair dusting) பரிந்துரைக்கின்றனர். அது என்ன ஹேர் டஸ்டிங்? எப்படி முடி பராமரிப்பிற்கு உதவுகிறது என்பது பற்றி இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

Read More : முடி பொலிவிழந்து காணப்படுகிறதா..? இந்த தினசரி பழக்கத்தை மிஸ் பண்ணாதீங்க...


ஹேர் டஸ்டிங் (Hair dusting) என்றால் என்ன?

பெண்கள் ஆசையாக வளர்ந்த நீளமான முடியை அதிகமாக வெட்ட மாட்டார்கள். இந்நிலையில் தான் நீளத்தைக் குறைக்காமல் பிளவுகளை மட்டும் அகற்றும் முறையான ஹேர் டஸ்டிங் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகியுள்ளது. இதில் தலைமுடியின் அடியில் இரண்டு பிளவுகளாக இருக்கும் முடியை மட்டும் வெட்டாமல், அனைத்து முடிகளிலும் முடியின் தண்டு வரை முன்னேறிய பிளவை வெட்டுகிறார்கள். இதன் மூலம் முடி பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் தெரிகிறது. இதோடு மற்ற முடிகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

இதனைத் தொடர்ச்சியாக பின்பற்றும் போது உங்களது தலைமுடியை ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு ஒரு வழியாக அமையும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர் ஷானாஸ் ஹூசைன். மேலும் முடி நன்றாக இருந்தாலும் அதிக முடி பிளவுகளைக் கொண்டிருந்தால் அதனை அடிக்கடி சரி செய்ய வேண்டும், மிகவும் அடர்த்தியான மற்றும் சுருட்டை முடிக்கு ஹேர் டஸ்டிங் செய்வது மிகவும் கடினம் என்றும் கூறுகின்றனர்.



இதுப்போன்று முடியைப் பாராமரிப்பதற்கு தற்போதுள்ள பல தொழில்நுட்பங்கள் உதவியாக இருந்தாலும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடியின் நீளத்தை அதே அளவில் பராமரிக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

முடி வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து உணவுகள்:

* மீன்: மீனில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உதவியாக உள்ளது.

* முட்டையில் உள்ள வைட்டமின் பயோட்டின் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

* பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் சூரிய காந்தி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.



* அத்தியாவசியமான கொழுப்பு அழிலங்கள் நிறைந்த அவகேடா பழங்களும் முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

* முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ள முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரைகள், பழங்கள் போன்ற உணவுகளை உங்களது அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களது முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதுப்போன்ற ஆரோக்கிய உணவுகளை ஒரு புறம் உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்தாலும், கற்றாழை, முட்டை, சீயக்காய் போன்றவற்றை உங்களது தலைமுடியில் அப்ளே செய்யலாம். குறிப்பாக கெமிக்கல் கலந்த ஷாம்புகளை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். இது நிச்சயம் உங்களது தலைமுடி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Beauty Tips, Hair care, Hairstyle

அடுத்த செய்தி