• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்க வழிகள்..!

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்க வழிகள்..!

செம்பருத்தி எண்ணெய்

செம்பருத்தி எண்ணெய்

கோடை காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு செம்பருத்தி நல்ல பலனை தரும். முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை, இளநரை போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்யும்.

  • Share this:
தற்போது முடி உதிர்வு, இளநரை பிரச்சனை அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து வருகின்றனர். ஆனால் யற்கையில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டே இந்த பிரச்சனைகளை எளிதாக சரி செய்யலாம். அவற்றில் முக்கியமான ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்தி இலைகள், மற்றும் பூக்களில் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இது பலவகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது மட்டுமின்றி அதிக குளிர்ச்சியை கொண்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு செம்பருத்தி நல்ல பலனை தரும். முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை, இளநரை போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்து கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உதவுகிறது.

ஏனெனில் செம்பருத்தி எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மயிர்கால்களை தூண்டி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்
செம்பருத்தி இலை - 2 கப்
செம்பருத்தி பூ - 8
கருவேப்பிலை - 1 கைப்பிடி
கருஞ்சிரகம் - 1 ஸ்பூன்



செய்முறை :

முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் மலர்களை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். செம்பருத்தி பூவில் உள்ள நடுப்பகுதியை நீக்கிவிடுவது நல்லது. பின்னர் ஒரு இரும்பு கடாய் எடுத்து நன்கு சூடானதும் தேங்காய் எண்ணெய்யை அதில் ஊற்றவும். எண்ணெய் மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு வேக விடவும். நுரை அடங்கும் வரை குறைவான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும். இதனை தொடர்ந்து கருவேப்பிலை மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு சூடாக்கவும்.

கொளுத்தும் வெயிலால் எரியும் சருமத்திற்கு இதம் தரும் ’மோர் ஃபேஸ் மாஸ்க்’ : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

இப்போது இந்த எண்ணெய் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி குளிரவைக்கவும், ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இருக்குமாறு மூடி வைத்தால் அதிலிருக்கும் சத்துக்கள் அனைத்தும் எண்ணெய்யில் வரும். பின்னர் மறுநாள் எண்ணெய்யை வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளலாம். இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையை சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து சுமார் 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால்உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்த முடியும், மேலும் முடி உதிர்வையும் தடுக்கலாம்.

இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். செம்பருத்தி தலை முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: