இந்தியாவில் முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு போன்ற சில தீங்கு விளைவிக்கும் மாசுக்களின் அளவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த காற்றை நாம் சுவாசிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி நமது சருமம் மற்றும் முடியையும் பாதிக்கிறது.
காற்று மாசுபாட்டில் இருந்து நமது முடியை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்...
வெளியில் செல்லும் போது...
* வெளியில் செல்லும் போது அதிகப்படியான எண்ணெய் நிச்சயம் வேண்டாம். அப்படி வைப்பதாக இருந்தாலும் சிறிதளவு எடுத்து கூந்தலின் வேர்க்கால்களில் மட்டும் தடவுவது நல்லது
* தினமும் வெளியில் செல்லும்போது கூந்தலில் படியும் மாசு தூசுகளை அகற்ற வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது நல்லது.
* வெளியே செல்லும் போது உங்கள் தலைமுடியை மறைத்தவாறு தொப்பி அல்லது ஸ்கார்ப் பயன்படுத்துங்கள். இது உங்கள் தலைமுடியை காற்று மாசு மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
* பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கொள்வது மாசு கூந்தலில் படியாமல் இருக்க உதவியாக இருக்கும். மேலும் கூந்தலை விரித்தபடி ஹேர் ஸ்டைல் செய்யாதீர்கள்.
தலைக்கு குளிக்கும் போது...
* தலைக்கு குளிக்கும் போது தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஹைட்ரேட் செய்கிறது.
* வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறு, முட்டை வெள்ளை கரு மாஸ்க் அப்ளை செய்து வாஷ் செய்யுங்கள்.
எலுமிச்சை முதல் பேக்கிங் சோடா வரை... இந்த 5 பொருட்களை மறந்தும் கூட முகத்தில் அப்ளை செய்யாதீங்க..!
சீரம் :
* தினமும் உங்கள் தலைமுடிக்கு சிறந்த தரமான சீரம் பயன்படுத்தவும். இது காற்று மாசுக்கு எதிராக முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.
* வாரம் ஒரு முறையாவது ஹேர் ஸ்பா செய்து கொள்ளுங்கள்.
* வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு நன்கு மசாஜ் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் .
உணவு :
* சத்தான ஆரோக்கிய உணவு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, எனவே தினமும் ஒரு சிறிய கிண்ணத்தில் மூலைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
* தினமும் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
* கறிவேப்பிலையில் இருக்கும் புரதமும், பீட்டா கரோட்டினும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே உணவில் கருவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள்.
* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Hair care, Hair Problems