• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருகருவென அடர்த்தியான முடிதான் உங்களுக்கு வேண்டுமா..? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

கருகருவென அடர்த்தியான முடிதான் உங்களுக்கு வேண்டுமா..? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

ஹேர் கேர் டிப்ஸ்

ஹேர் கேர் டிப்ஸ்

பெரும்பாலானோருக்கு அவர்கள் பயன்படுத்தும் ஷாம்பூ, கண்டிஷனர், சாப்பிடும் உணவுகள், வாழ்வியல் முறை போன்றவற்றின் தாக்கத்தால் அதிக பாதிப்பு முடிக்கு ஏற்படுகிறது.

  • Share this:
நமக்கு ஏராளமான பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றில் சிலவற்றை நினைத்து நாம் எப்போதும் வருந்திக்கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட ஒன்று தான் நமது முடி சம்பந்தமான பிரச்சனைகளும். முடி உதிர்வு, இளம்நரை, அடர்த்தி இல்லாத முடி, முடியில் வெடிப்பு ஏற்படுதல்... இப்படி பல்வேறு விதமான பாதிப்புகள் முடிக்கு ஏற்படுகின்றன. இவை சிலருக்கு எந்த காரணமும் இல்லாமல் உண்டாகலாம்.

ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்கள் பயன்படுத்தும் ஷாம்பூ, கண்டிஷனர், சாப்பிடும் உணவுகள், வாழ்வியல் முறை போன்றவற்றின் தாக்கத்தால் அதிக பாதிப்பு முடிக்கு ஏற்படுகிறது. பலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்பட்டு முடியின் அடர்த்தி முழுவதுமாக குறைந்திருக்கும். அப்படிப்பட்டோருக்கு 'குளோ அன்ட் கிரீன்' தளத்தின் நிறுவனர் சில எளிய வீட்டு குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இவற்றை பற்றி விரிவாக இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹாட் வாட்டர் ஸ்டீம் :

தலைக்கு குளிக்கும் முன்நாளே ஆமணக்கு எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விடவும். பிறகு மறுநாள் காலையில் குளிப்பதற்கு முன் ஒரு துண்டை சுடு நீரில் முக்கி எடுத்து, அதை பிழிந்து விட்டு தலையில் கட்டிக் கொள்ளவும். இது போன்று ஹாட் வாட்டர் ஸ்டீம் எடுப்பதால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அப்படியே பாதுகாக்கப்படும். மேலும் இதனால் முடிக்கு புத்துணர்வு கிடைத்து, விரைவில் அடர்த்தி ஆகும்.ப்ளோ-டிரை :

ப்ளோ டிரையின் போது நாம் செய்யும் சில தவறுகள் முடியின் வளர்ச்சியை பாதிக்கும். எப்போதும் ப்ளோ டிரை செய்யும்போது முடியை தலைகீழாக போட்டு செய்ய வேண்டும். அப்போது தான் அடர்த்தியான முடிக்கான தோற்றம் கிடைக்கும்.

இளநரையை மறைக்க கெமிக்கல் டையா..? வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்க டிப்ஸ்

வீட்டு வைத்தியம் :

முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டே உங்களின் முடியை அழகாக மாற்றிடலாம். இதற்கு வெறும் 3 பொருட்கள் இருந்தால் போதும்.
முதலில் தண்ணீரை சூடு செய்து குளிர வைத்து கொள்ளவும். அதில் சிறிது கல் உப்பு மற்றும் ஒரு துண்டு கற்றாழை சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து கொண்டு, ஸ்ப்ரே செய்யும் பாட்டிலில் ஊற்றி விடுங்கள். முடியை அடர்த்தியாக்க, தேவைப்படும் போது உங்கள் முடிக்கு ஸ்ப்ரே போன்று பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.முடி ஆரோக்கியம் :

முடி விரைவில் வளரவும், அடர்த்தியாகவும் பல விதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தி வருவோம். இதனால் முடியில் வெள்ளையான துகள்கள் படிந்து, அதன் ஆரோக்கியத்தை கெடுக்கும். இதை எளிதில் சரிசெய்ய இந்த பொடியை வீட்டில் தயாரித்து பயன்படுத்துங்கள்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 1/2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, 1/2 டேபிள்ஸ்பூன் சோள மாவு எடுத்துக் கொள்ளவும். இதில் 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி அல்லது கோக்கோ பக்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரத்திற்கு பின் தலைக்கு குளிக்கவும். இப்படி செய்வதால் முடியில் உள்ள தேவையற்ற எண்ணெய் பிசுக்குகள் குறையும். மேலும் முடியில் ஒட்டி உள்ள வெள்ளை துகள்கள் நீங்கும்.

மேற்சொன்ன எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி, உங்கள் முடியை அடர்த்தியாக வளர செய்யுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: