நாம் வெளி உலகிற்கு எப்படி தோன்ற வேண்டும் என்பதிலும், நல்ல அழகான லுக்கிற்கும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது தலை முடி. தற்போதைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்திற்கு நடுவே பலருக்கும் முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற நேரம் இருப்பதில்லை.
நிம்மதியான தூக்கம் முதல் ஆரோக்கியமான உணவுகள் வரை அன்றாட பழக்கவழக்கங்கள் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தலுக்கு எடுத்து கொள்ள வேண்டிய ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகள் பற்றி சமீபத்திய தனது இன்ஸ்டா பதிவில் ஷேர் செய்து இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா.
இயற்கை முறையில் ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும்பொருட்களை பற்றியும் குறிப்பிட்ட இன்ஸ்டா போஸ்ட்டில் தெரிவித்துள்ளார் லோவ்னீத்.
View this post on Instagram
வெந்தய விதைகள்:
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான 2 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரும்பு மற்றும் புரதம். வெந்தய விதைகளில் இவை இரண்டும் நிறைந்து காணப்படுகின்றன. தவிர ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் உட்பட தனித்துவ தாவர கலவைகளை கொண்டிருக்கின்றன. அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு விளைவுகள் இந்த கலவையில் காணப்படுவதால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கறிவேப்பிலையில் உள்ளன. அதுமட்டுமின்றி, கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது.
ஆளி விதைகள்:
கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆளி விதைகளில் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் இருந்து மாசுக்கள் மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவுகின்றன. முடி பராமரிப்பிற்காக தயாரிக்கப்படும் ஆளிவிதை ஜெல் புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் ஏற்கனவே இருக்கும் முடியின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தவிர முடியை மிகவும் பஞ்சு போன்றதாக மாற்றுகிறது. தவிர ஆளி விதையில் வைட்டமின்கள் பி, ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் ஆளிவிதைகளை சேர்ப்பது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த, முடி உதிர்வை குறைக்க பெரிதும் உதவும்.
உங்கள் தலைமுடிக்கு வெங்காய எண்ணெய் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளே இருக்காது...
கற்றாழை:
கற்றாழையில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளிட்ட 3 வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. ஆரோக்கியமான செல் வளர்ச்சி பளபளப்பான முடியை ஊக்குவிக்கிறது. தவிர கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இஞ்சி:
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள இஞ்சி உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடி வேர் மற்றும் நுண்ணறைகளை பலப்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள பல கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடி இழைகளை வலுப்படுத்துகிறது. முடியை பளபளப்பாக மற்றும் மிருதுவாக மாற்றுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair care, Hair growth