வறண்ட கூந்தல் பிரச்னையா? பளபளக்கும் கூந்தலை வீட்டிலேயே பெறலாம்

வறண்ட கூந்தல் பிரச்னையா? பளபளக்கும் கூந்தலை வீட்டிலேயே பெறலாம்

பளபளக்கும் கூந்தல்

முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் அப்ளை செய்ய வேண்டும்.

 • Share this:
  கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம். அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

  முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதைச் செய்து வந்தால் உங்கள் கூந்தல் டாலடிக்கும்.

  கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும் படி அப்ளை செய்யவும். இது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. பின்னர் 1 மணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்பூவால் ஹேர் வாஷ் செய்யவும்.

  வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய் பசை, பொட்டாசியம், விட்டமின்கள் இருக்கின்றன. இது கூந்தல் நுனி பிளவுபடுவதை தடுக்கிறது. முடிக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பட்டு போல் ஆக்குகிறது. அதனால் கனிந்த வாழைப்பழத்தை மசித்து தலைக்கு அப்ளை செய்து, 30 நிமிடம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும்.

  ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, நல்லெண்ணையில் ஊறவைக்கவும். 2 அல்லது 3 நாட்கள் கழித்து நன்கு ஊறிய பின் இலைகளை வடிகட்டிவிட்டு, அந்த எண்ணெய்யை கேசத்துக்குத் தைலமாகப் பயன்படுத்தி வர, முடிக்கொட்டுதல் பிரச்னை குணமாவதுடன் வறட்சித்தன்மையும் குணமாகும்.

  தலைமுடியில் இயற்கையாகவே எண்ணெய்த்தன்மை இருக்கும் என்பதால் தினமும் காலை ஒருமுறை மாலை ஒருமுறை தலையை பெரிய பற்கள் கொண்ட சீப்பால் வாரினாலே முடி பளபளப்பாக தெரியும்.

  மூடி அதிக வறட்சித்தன்மை உடையவர்கள் தேங்காய்ப்பாலை ஸ்கால்ப்பில் படாமல் மூடியில் மட்டும் தேய்த்து,ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் அலச கூந்தல் வறட்சித்தன்மை குறையும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: