முடி பராமரிப்பு என்பது கொஞ்சம் கடினமானது தான். ஒவ்வொருவருக்கும் முடியின் அமைப்பு வேறுபாடும். வறண்ட கூந்தல், பலவீனமான வேர்கள், பொடுகு, எண்ணைப்பசை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பரவலாகக் காணப்படுகிறது. எனவே, எந்த வகையான முடி அமைப்புக்கு, கூந்தல் பிரச்சனைகளுக்கு எந்த வகையான பராமரிப்பு முறையை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்படலாம்.
இப்போது பண்டிகை நேரம். எனவே, உங்கள் அழகான ஆடை அலங்காரத்துக்கு ஏற்ப, கூந்தலும் அழகாக இருக்க வேண்டுமே! பரபரப்பான பண்டிகை நாட்களில் உங்கள் கூந்தலை வீட்டிலேயே சிறந்த முறையில் பராமரிக்க நிபுணர்கள் பரிந்துரைத்த DIY வழிமுறைகள் இங்கே.
* செம்பருத்தி நெல்லி மற்றும் தயிர் :
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பவுடர்
நெல்லிக்காய் பவுடர்
தயிர்
செய்முறை
செம்பருத்தி பவுடர், நெல்லிக்காய் பவுடர் மற்றும் தயிர் ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு கலந்து, ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலையில் முதல், பின்கழுத்தில் முடியின் அடிப்பகுதி வரை, முடியின் வேர்களில் நன்றாகப் படுமாறு, இந்த கலவையை நன்றாகப் பூசவும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற பின்னர் விடவும். பிறகு ஷாம்பூ பயன்படுத்தி நன்றாக அலசவும்.
செம்பருத்தியில் உள்ள அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு சிறப்பான கெரட்டின் புரதத்தை உருவாக்குகிறது. நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி சேதமடைவதைக் குறைக்கிறது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கின்றன.
* வெந்தயம் மற்றும் தயிர் :
தேவையான பொருட்கள்:
தயிர் – ஐந்து தேக்கரண்டி
வெந்தயம் – மூன்று முதல் நான்கு தேக்கரண்டி
செய்முறை:
வெந்தயத்தை தயிரில் கலந்து, முந்தைய நாள் இரவில் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய வெந்தயத்தை விழுது போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த வெந்தயத்தை முடிகளில் வேர்க்கால்களில் நன்றாகப் படுமாறு தடவவும். குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு ஊறி, மைல்டான ஷாம்பூ போட்டு அலசவும்.
வெந்தயத்தில் புரதம், இரும்புச்சத்து மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது கூந்தல் வேர்களை வலுவாக்கி, முடி உதிர்வை குறைக்கிறது. மேலும், கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது.
* கறிவேப்பிலை, செம்பருத்தி எண்ணெய் :
அதிகப்படியான முடி உதிர்வுக்கு பெரும்பாலும் முடி வறட்சியே காரணமாக இருக்கின்றது. அதைத் தடுக்க, முடிகள் வேர் வரை ஈரப்பதம் பரவும் வகையில் முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணையை வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்.
தினமும் 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டால் நல்லதா..? எப்போது.. எப்படி சாப்பிட வேண்டும்..?
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 2 கப்
செம்பருத்தி பவுடர் / பூக்கள்
10-12 கறிவேப்பிலை
செய்முறை:
தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி, அது கொதிப்பதற்கு முன்பு செம்பருத்தி பவுடர் பூக்கள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். நன்றாக கொதித்து, நிறம் மாறிய பிறகு, எண்ணையை ஆறவிடவும். எண்ணெய் குளிர்ச்சியான பின்பு தலையில் உச்சந்தலை முதல் நுனி முடி வரை நன்றாகத் தடவி மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் அளவுக்கு ஊறிய பிறகு, ஷாம்பூ போட்டு நன்றாக அலசவும். வாரம் ஒரு முறை இதைப் பயன்படுத்தலாம்.
வீட்டிலேயே கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்து சுலபமாக ஹேர்மாஸ்க்குகளை செய்து, உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.