• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கூந்தல் மற்றும் சரும அழகை பராமரிக்க வாழைப்பழத்தில் இருக்கும் மகத்தான நன்மைகளை பற்றி தெரியுமா..?

கூந்தல் மற்றும் சரும அழகை பராமரிக்க வாழைப்பழத்தில் இருக்கும் மகத்தான நன்மைகளை பற்றி தெரியுமா..?

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும்.

  • Share this:
வாழைப்பழம் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பழம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பொலிவான கூந்தல் மற்றும் சருமத்திற்கும் நல்லது.

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமம் மற்றும் உலர்ந்த கூந்தலை செய்கிறது என்று அழகு கலை நிபுணர் ஷாஹனாஸ் ஹுசைன் கூறுகிறார். இதுகுறித்து விளக்கும் அவர் வாழைப்பழத்தின் கூந்தலை முடி மற்றும் முகம் இரண்டிற்கும் பேக் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கிறார். அவர் கூறிய தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.,

* வாழைப்பழத்தை சருமத்தில் அப்ளை செய்வதால், சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி ஓபன் போர்ஸ்களை இருக்குகிறது. இதனால் நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.

* இதற்கு ஒரு கப் தயிர் எடுத்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி பின்னர் கழுவி வரலாம். இதனை வாரம் இரண்டு முறை செய்து வர சருமம் பொலிவாகும்.

* வாழைப்பழத்துடன் தேன், தக்காளி கலந்தும் சருமத்தில் பயன்படுத்தலாம். மேலும் வாழைப்பழத்துடன் பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பிற பழங்களையும் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு சிறந்த முகவராக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன், ஆரஞ்சு சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பிரகாசமடையும்.



* ஆப்பிளில் உள்ள பெக்டின் காரணமாக வாழைப்பழத்துடன் கலக்கும்போது சிறந்த ப்ளீச்சிங்காக செயல்படுகிறது.

* ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி தொடந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்.

பெண்களை அதிகளவில் தாக்கும் “மார்பக புற்றுநோய்” - காரணம் என்ன..?

* கூந்தலுக்கு வாழைப்பழைத்தை பயன்படுத்தும் போது வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன், ஒரு தேக்கரண்டி தூய கிளிசரின் மற்றும் பாதம் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் கூந்தலுக்கு நன்கு ஊட்டமளிக்கும், இந்த கலவையை உங்கள் கூந்தலில் பேக்காக பயன்டுத்தி ஒரு டிஸ்யூ கொண்டு மூடி விட்டு சிறிது நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு வாஷ் செய்யலாம்.

கருமையான, நீளமான கூந்தலைப் பெற இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்..

* இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி கூந்தல் நன்கு வளரவும் உதவுகிறது. மேலும் வாழைப்பழத்துடன், தயிர் சேர்க்கும் கலவையை உங்கள் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இது பொடுகை நீங்க உதவுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: