நமது சருமம் பொலிவாகவும், நமது தலைமுடி ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய பல வழிகளை எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்போம். ஆனால், அவற்றில் நமக்கு பெரிய அளவில் பலன் எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. இது போன்று பல முயற்சி செய்து அதில் பலன் எதுவும் கிடைக்காமல் உள்ளதா? இதற்கு சிறந்த வழி இங்கே உள்ளது. பொதுவாக இன்றைய கால கட்டத்தில் பலரும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கிறோம். உங்களின் எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் இந்த இயற்கை சார்ந்த பொருட்களில் தான் உள்ளது.
அந்த வகையில், சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்த வீட்டு வைத்தியம் என்று பாமாயில் (பனை எண்ணெய்), பல அழகு சாதனப் பொருட்களின் அழகு ரகசியமுமாக இருந்து வருகிறது. பனை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அதிக நன்மை கிடைக்கும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளது. உங்கள் சருமம் மற்றும் முடி பராமரிப்பு நடைமுறைகளில் நேரடியாக பாமாயிலைப் பயன்படுத்துவதன் மூலம், தோல் மற்றும் முடி தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த பதிவில் இது குறித்த மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்வோம்.
வறட்சியான முடி
இன்றைய வாழ்க்கை சூழலில் பலருக்கும் முடி வறட்சியாக மாறி விடுகிறது. ஆனால், இதற்கான சிறந்த தீர்வு பாமாயிலில் உள்ளது. ஆம், பாமாயிலைப் பயன்படுத்தி உச்சந்தலை வறட்சியைப் போக்கலாம். பாமாயிலில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் உச்சந்தலையை ஈரப்பதமாகவும், தொற்று இல்லாமல் வைத்திருக்கவும் செய்கிறது. எனவே, முடியும் வறட்சியாக இருக்காது.
இயற்கையான சன்ஸ்கிரீன்
கோடை காலத்தில் வெளியில் செல்ல வேண்டுமென்றால், அவசியம் சன்ஸ்கிரீன் லோஷனை நாம் பயன்படுத்துவோம். இதற்கு மாறாக நீங்கள் பாமாயிலை பயன்படுத்தலாம். பாமாயிலைப் பயன்படுத்துவது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுப்பதன் மூலம் சருமத்தை வெயிலின் தாக்கம் மற்றும் சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்க வழி செய்கிறது.
உதடுகளை பராமரிக்க உதவும் லிப் ஸ்கிரப்ஸ் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...
சருமத்தில் சுருக்கங்கள்
தோலில் ஏற்படும் சுருக்கங்கள் வயதான தோற்றதை தருவது பலருக்கும் அசௌகரியமாக இருக்கும். எனவே, தோல் சுருக்கங்களை குறைக்க பாமாயிலின் சிறந்த பண்புகள் உதவும். இது சருமத்தை வயதான அறிகுறிகளில் இருந்து பாதுகாக்கும். மேலும், பாமாயிலைத் தொடர்ந்து தடவுவதன் மூலம், முகச் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தவிர்க்க முடியும்.
சரும ஈரப்பதம்
ஒருவரின் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஈரப்பதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு போகும். சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்க பாமாயில் மிகவும் உதவுகிறது. பாமாயிலில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே ஆகியவை சருமத்திற்கு ஊட்டமளித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தின் வறட்சியை குறைக்கிறது. மேலும், இயற்கையான முறையில் பளபளப்பையும் தருகிறது
நான் முகப்பருவுடன் போராடிய நாட்கள் மறக்க முடியாதவை... மீண்டு வந்த நினைவுகளை பகிர்ந்த பிரபலம்..!
தலை முடி பிரச்சனை
பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் என்கிற முக்கிய மூலப்பொருள் தலை முடி சார்ந்த பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டசத்துக்கள் முடிக்கு தேவையான ஊட்டத்தை அளித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.