Home /News /lifestyle /

கருகரு கூந்தலுக்கு கொய்யா இலையில் உடனே பலன் கிடைக்குமா.? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!

கருகரு கூந்தலுக்கு கொய்யா இலையில் உடனே பலன் கிடைக்குமா.? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!

கொய்யா இலை

கொய்யா இலை

கொய்யா இலையில் விட்டமின் பி மற்றும் சி நிறைவாக உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டை தூண்டுகிறது.

இளமையிலேயே வெள்ளை முடியால் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் கெமிக்கல் டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இது சிலருக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம். எனவே இயற்கையான முறையில் பின்பற்றுவது பக்கவிளைவுகளும் இருக்காது. பலனும் கிடைக்கும். அதற்கு சிறந்த வழி கொய்யா இலைகளிலேயே இருக்கிறது.

கொய்யா இலையில் விட்டமின் பி மற்றும் சி நிறைவாக உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டை தூண்டுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் , அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே கூந்தலை பராமரிக்கவும் , அதன் நிறத்தை மேம்படுத்தவும் கொய்யா இலைகள் சிறந்து விளங்குகின்றன. எனவே செலவே இல்லாமல் கொய்யா இலைகளை பயன்படுத்தி எப்படி முடியை கருமையாக்குவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொய்யா இலை - 1 கைப்பிடி
தண்ணீர்- 1 லிட்டர்



செய்முறை :

கொய்யா இலைகளை நன்கு அலசிக்கொள்ளுங்கள்.

பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்று கொய்யா இலைகளை நன்கு கொதிக்க வையுங்கள்.

20 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள்.

அந்த தண்ணீர் ஆறியதும் வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையின் வேர்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதோடு முடியும் நிறம் மாறும்.

குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்கும்போது நீங்கள் செய்யும் தவறுகள் இதுதான்..!

மசாஜ் செய்த பிறகு அரை மணி நேரம் அந்த தண்ணீர் தலையில் நன்கு ஊற வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசிவிடுங்கள்.

இதை வாரம் இரண்டு முறை செய்யலாம். அவ்வாறு செய்வதால் நீங்கள் நினைத்தது போல் கரு கரு கூந்தல் அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Guava, Hair care, Hair growth, Hair loss

அடுத்த செய்தி