Home /News /lifestyle /

பிரியங்கா சோப்ராவின் ஃபேவரெட் ’கோல்டு ஷீட் மாஸ்க்’ : பயன்படுத்தும் முறைகள் மற்றும் நன்மைகள்..!

பிரியங்கா சோப்ராவின் ஃபேவரெட் ’கோல்டு ஷீட் மாஸ்க்’ : பயன்படுத்தும் முறைகள் மற்றும் நன்மைகள்..!

கோல்டு ஷீட் மாஸ்க்

கோல்டு ஷீட் மாஸ்க்

ஷீட் மாஸ்க்குகள் சீரம் எனப்படும் ஊட்டச்சத்து நிரம்பிய கரைசலில் ஊறவைத்த முக வடிவ துணி ஷீட்கள் (face shape fabric masks) ஆகும்.கோல்டு ஷீட் ஃபேஸ் மாஸ்க் வயதான தோற்றத்திற்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன.

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தன் அற்புதமான நடிப்பு மற்றும் அழகின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். மேலும் சமூக பிரச்சனைகள் குறித்து தன் கருத்துக்களை கூறுவது, தனது மேனி பராமரிப்பு பற்றிய தகவல்களை பகிர்வது என எப்போதும் சமூக ஊடக தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு கோல்டு ஷீட் மாஸ்க்(Gold Sheet Mask) மாஸ்க் அணிந்திருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

21 வருடங்களுக்கு முன் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா இன்னும் இளமையாக காட்சி தருவது குறித்து வியக்கிறீர்களா.! அதே போல அவர் ஷேர் செய்த கோல்டு ஷீட் மாஸ்க் உங்கள் சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் மற்றும் அழகு பொலிவை கூட்டும் இந்த மந்திர மாஸ்க் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஷீட் மாஸ்க்குகள் என்றால் என்ன?

ஷீட் மாஸ்க்குகள் சீரம் எனப்படும் ஊட்டச்சத்து நிரம்பிய கரைசலில் ஊறவைத்த முக வடிவ துணி ஷீட்கள் (face shape fabric masks) ஆகும். உங்கள் வழக்கமான ஃபேஸ் பேக்குகளிலிருந்து ஷீட் மாஸ்க்குகள்
வேறுபடுகின்றன. வழக்கமான ஃபேஸ் பேக்குகளை குறைந்தது 10-15 நிமிடங்கள் முகத்தில் காயவைத்த பிறகு கழுவு வேண்டும். ஆனால் பேக்கிற்குள் இருக்கும் ஷீட் மாஸ்க்குகள் ஏற்கனவே ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். வாய், மூக்கு துவாரங்கள், கண்ணிற்கு இடைவெளி விட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் ஷீட் மாஸ்க்குகளை கவனமாக எடுத்து முகத்தில் அப்ளை செய்து ஒட்டிக் கொள்ள வேண்டும். முகத்தில் ஷீட் மாஸ்க் போடுவதற்கு முன் ஸ்கின் டோனரை பயன்படுத்தலாம். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து ஃபேஸ் ஷீட் மாஸ்க்கை அகற்றி விடலாம். ஷீட் மாஸ்க்கில் உள்ள ஈர்ப்பதம் முகத்திற்கு குளுமையை தரும்.கோல்டு ஷீட் மாஸ்க் ஏன்?

கோல்டு ஷீட் ஃபேஸ் மாஸ்க் வயதான தோற்றத்திற்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன என்றும் எகிப்திய ராணி கிளியோபாட்ரா போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இது உங்கள் சருமத்திற்கு புத்துயிர் மற்றும் புத்துணர்ச்சி அளிக்க உதவும் பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. கோல்டு ஷீட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் உங்கள் முகம் இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

கோல்டு ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதன் நன்மைகள்...

இளமையான தோல்:

தங்கம் உட்செலுத்தப்பட்ட ஷீட் மாஸ்க்குகள் சருமத்தில் கொலாஜன்(collagen) உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. இது முகத்தில் விழும் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் தொய்வு போன்ற சிக்கல்களை சரி செய்ய போராடுகிறது. மேலும் இளமையான தோற்றத்துடன் கூடிய ஆரோக்கிய சருமத்திற்கான நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கும்.ஏஜ் ஸ்பாட்களை குறைக்கும்:

கோல்டு ஷீட் மாஸ்க்குகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் மற்றும் சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யும். மேலும் காலப்போக்கில் தோலில் ஏற்படும் ஏஜ் ஸ்பாட்கள் எனப்படும் புள்ளிகளை மறைய செய்யும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்..

கோல்டு ஷீட் மாஸ்க்குகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை சரிசெய்ய, புதுப்பிக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

தோல் அழற்சி..

இவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மிக்கவை என்பதால், முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உங்கள் சருமத்திற்கு உதவுகிறது. இது உங்கள் தோல் அழற்சி மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும்.கோல்டு ஷீட் மாஸ்க் வகைகள்:

கோல்டு இன்ஃபியூஸ்டு மாஸ்க்..(Gold infused Sheet Masks)

ஷீட் மாஸ்க்குகள் அப்ளை செய்ய மற்றும் அகற்ற எளிதானது மற்றும் அவை துணிகள் மற்றும் ஃபாயில் பொருள்களில் வருகின்றன. இவை உங்கள் மூக்கு, கண் மற்றும் வாய் பகுதியை சுற்றி சரியான அளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இது உங்கள் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது மற்றும் முழுமையாக ஹைட்ரேட் செய்கிறது.

திருமண நாளில் பளபளப்பான சரும பொலிவை பெற மணமகளுக்கான உப்டான் அழகு குறிப்பு!

கோல்டு பீல் ஆஃப் மாஸ்க்..(Gold peel off mask)

உங்கள் மூக்கு மற்றும் வாய் பகுதியைச் சுற்றியுள்ள பிளாக்ஹெட்ஸை அகற்ற இந்த முகமூடிகள் உங்களுக்கு உதவுகின்றன. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்து ஆழமாக சுத்தப்படுத்தி சுத்திகரிக்கிறது.

கிரீம் பேஸ்டு ஃபேஸ் மாஸ்க்..(Cream Based Gold Face Packs)

இந்த வகை ஃபேஸ் மாஸ்க்குகளை உங்கள் சுத்திகரிக்கப்பட்ட முகத்தில் நேரடியாகவோ அல்லது ஒரு பிரஷ் அல்லது விரல்களின் உதவியுடன் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்கள் கழித்தோ அல்லது அது வறண்டு போகும் வரையோ காத்திருந்து சாதாரண நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Face mask, Priyanka Chopra, Skincare

அடுத்த செய்தி