முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பொடுகுத் தொல்லை முதல் நுனி முடி உடைவது வரை… தலைமுடி பிரச்சனைகளுக்கு உதவும் நெய் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

பொடுகுத் தொல்லை முதல் நுனி முடி உடைவது வரை… தலைமுடி பிரச்சனைகளுக்கு உதவும் நெய் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

நெய்

நெய்

வேர்களின் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் நின்று போவதால்தான் தலைமுடி வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க நெய் சிறந்த மருந்து. வைட்டமின் சத்து, மினரல் சத்துகள் நிறைந்திருப்பதால் வேர்கள் அவற்றை உள்ளிழுத்து எண்ணெயை தக்கவைத்துக் கொள்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நெய் உணவுக்கு மட்டுமல்ல. தலை முடிக்கும் பயன்படுத்தினால் பல நன்மைகள் ஏற்படும். அதில் உள்ள சத்துகள், வைட்டமின்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கின்றன. எவ்வாறு என்பதைக் காணலாம்.

தலைமுடிக்கு சிறந்த கண்டிஷ்னர் : ஆண்டி ஆக்ஸிடண்ட், கொழுப்புச் சத்து ஆகியவை நிறைந்திருப்பதால் அவை தலைமுடி வேர்களால் உறிஞ்சப்பட்டு வறண்ட வேர்களுக்கு எண்ணெய் பிசுக்கை அளித்து கண்டிஷ்னராக செயல்படுகிறது.

குறிப்பு : தேங்காய் எண்ணெயுடன் ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் நெய் கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்யுங்கள்.

பொடுகுத் தொல்லை நீங்க : வேர்களின் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் நின்று போவதால்தான் தலைமுடி வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க நெய் சிறந்த மருந்து. வைட்டமின் சத்து, மினரல் சத்துகள் நிறைந்திருப்பதால் வேர்கள் அவற்றை உள்ளிழுத்து எண்ணெயை தக்கவைத்துக் கொள்கிறது.

குறிப்பு : ஒரு மேசைக்கரண்டி நெய்யில் பாதியளவு எலுமிச்சை சாறைப் பிழிந்து தலையில் மசாஜ் செய்து குளிக்க பொடுகுத் தொல்லை பறந்து போகும்.

முடியின் மொர மொரப்புத் தன்மை நீங்கி மென்மையாக பளபளக்க : இதற்காக கண்ட கெமிக்கல் நிறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவதை விட நெய் என்னும் இயற்கை மூலிகையைப் பயன்படுத்துங்கள். அதன் எண்ணெய் தன்மை மொரமொரப்பான முடியையும் நொடியில் பளபளக்கச் செய்யும். பின் நீங்கள் முடியை தைரியமாக விரித்தபடி ஸ்டைல் செய்யலாம்.

குறிப்பு : நெய்யை சூடு படுத்தி, வெதுவெதுப்பான சூடு பதத்திலேயே தொட்டுத் தடவி மசாஜ் செய்யுங்கள். 30 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.

அரிசி தண்ணீரில் தலைமுடியை அலசினால் முடி கொட்டும் பிரச்சனையே இருக்காதா..? ஆச்சரியம் தரும் நன்மைகள்

முடியின் முனைகள் உடைவதை தடுக்கும் : நெய்யில் இருக்கும் வைட்டமின் A,D,K2 E மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் முடிக்கு ஊட்டச்சத்து அளித்து தலை முடி சிதைவதைத் தடுக்கிறது.

குறிப்பு : வெது வெதுப்பான நெய்யில் உங்கள் தலை முடியின் முணையை முக்கி எடுத்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்க முடி உடைந்து போவதை தடுக்கலாம்.

முடி வளர்ச்சி அதிகரிக்க : சரியான ஊட்டச்சத்து, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலை முடி உதிர்வு ஏற்படும். இதைத் தடுக்க நெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 ஆகிய கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதாலும், வைட்டமின் A மற்றும் E, மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் போன்ற புரதச் சத்துகளும் அதிகமாக இருப்பதால் வேர்களில் தலைமுடி வளர்வதற்கான செல்களைத் தூண்டச் செய்து தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கருகரு கூந்தலை பெற வீட்டிலேயே தயார் செய்ய ஹேர் ஆயில் : உங்களுக்கான டிப்ஸ்...

குறிப்பு : பெரிய நெல்லிக்காய் துண்டுகளை நறுக்கிக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் முக்கும் அளவிற்கு நெய் ஊற்றி சூடு படுத்துங்கள். அதில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு கொதிக்க விடவும். நன்குக் கொதித்ததும் இறக்கி வடிகட்டுங்கள். அந்த எண்ணெய் வெது வெதுப்பாக இருக்கும்போது தொட்டு தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளியுங்கள். அந்த நெய்யை பதப்படுத்தி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் தடவிவிட்டுக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

First published:

Tags: Dandruff, Ghee, Hair care, Hair fall, Hair Problems