புருவப் பராமரிப்பு

புருவத்தில் முடி மிருதுவாகவும், அடர்த்தியாகவும் இருப்பதற்கு தினமும் இரவு உறங்குவதற்கு முன்பாக விளக்கெண்ணெய் ஒரு துளி எடுத்து இரண்டு நிமிடம் மசாஜ் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள் காஸ்மெட்டாலஜி நிபுணர்கள்.

ஐப்ரோ ப்ரஷ் பயன்படுத்தி புருவத்தை சரிசெய்வதும், முகத்தை கழுவும்போது புருவப்பகுதியையும் நன்கு சுத்தமாக கழுவுவதும் அவசியம் என ஃபெமினா இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷெர்லி.

Micronutrients என்னும் நுண்சத்துக்கள் நிறைந்த உணவினை உண்ணவேண்டும். Threading என்னும் புருவ நேர்த்தி நடைமுறைக்கு முன்பு மிதமான வெந்நீரில் குளித்துவிட்டு த்ரெட்டிங் செய்தால், அதிக வலி தராமல் இருக்கும் என பரிந்துரைக்கிறார்கள் யாலோன் அழகுக்கலை நிபுணர்கள். த்ரெட்டிங் முடிந்ததும் கற்றாழை அல்லது கற்றாழை ஜெல் கொண்டு புருவப்பகுதியின் மீது மசாஜ் செய்தலும் அவசியம் என்கிறார்கள்
First published: July 25, 2020