பொடுகுத் தொல்லையால் அவதியா..? இவற்றை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!

மாதிரி படம்

நமது தலையில் உள்ள இறந்த செல்கள் குவிந்து செதில் செதிலாக வருவது தான் இந்த பொடுகு.

  • Share this:
சிலருக்கு தலை எப்பொழுதும் பார்த்தாலும் அரித்துக் கொண்டே இருக்கும். எல்லா ஷாம்பையும் ட்ரை செய்து பார்ப்பார்கள் ஆனாலும் அரிப்பு மட்டும் நிற்காது. இதற்கு முக்கிய காரணம் நமது தலையில் இருக்கும் பொடுகு தான். நமது தலையில் உள்ள இறந்த செல்கள் குவிந்து செதில் செதிலாக வருவது தான் இந்த பொடுகு.

இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும். இதனால் முடிகளின் வேர்கள் பலவீனம் அடைந்து உதிர ஆரம்பித்து விடுகிறது. அதுமட்டுமின்றி சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் தோன்றவும் காரணமாக இருக்கிறது. இந்தப் பொடுகு தொல்லையை எப்படித்தான் போக்குவது என்று கவலைபடுகிறீர்களா? கவலையை விடுங்க பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க...

டீ இலைகள்:

முடிக்கு பளபளப்பை தர, ஏற்கெனவே பயன்படுத்திய டீ இலைகளை எடுத்து 6 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நீரின் அளவு முடியின் நீளத்தைப் பொறுத்தது. பின்னர் தண்ணீரை வடிகட்டி குளிர்விக்கவும். அடுத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்புவை பயன்படுத்திய பிறகு டீ தண்ணீரை பயன்படுத்தவும். டீயில் உள்ள டானின் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்த்து மென்மையாக்குகிறது. இது அனைத்து விதமான முடி வகைகளுக்கும் பொருந்தும். இதையும் நீங்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்:

இது உங்கள் தலை பராமரிப்புக்கு ஏற்ற எளிதான முறை. இதற்கு உங்கள் கையில் இரண்டு பொருட்கள் இருந் தாலே போதும். கற்பூரத்தையும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தூங்க போவதற்கு முன் தினசரி தலையில் தேய்த்து வாருங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள கற்பூரம் உங்களுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு பொடுகை எதிர்த்து போராடவும் செய்கிறது. தேங்காய் எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் மயிர்க்கால்களின் வலிமைக்கும் உதவுகிறது. உங்கள் முடிக்கு ஏற்ற அளவு எண்ணெயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேய்க்கும் போது மயிர்க் கால்களில் படும் படி தேயுங்கள்.

உங்களால் படிகட்டுகளில் வேகமாக ஏற முடியவில்லையா..? இந்த பிரச்னை இருக்கலாம்... மருத்துவரை அணுகுவது நல்லது..

கற்றாழை:

கற்றாழை சரும கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பயோ ஆக்டிவ் சேர்மங்களின் வளமான ஆதாரமாகும். சோற்றுக் கற்றாழையில் இருக்கும் ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் பொடுகு உள்ளிட்டஎல்லாவிதமான பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது. சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக படுவதை உறுதி செய்யும் விதமாக வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

வெங்காயச் சாறு:

வெங்காயச்சாறு பைட்டோ கெமிக்கல் மூலக்கூறுகள் நிறைந்தது என்றும் இது பொடுகை தடுக்க பெருமளவில் உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மேற்பூச்சாக தடவும்போது சருமத்தில் செதில்கள் உதிர்வதை தடுத்து பொடுகை குறைக்கிறது. பாதி வெங்காயத்தை அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். உச்சந்தலை முழுவதும் அதை தாராளமாக தடவவும். ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.ரோஸ் வாட்டர்:

ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதற்கு முன்பு அது தரமானதுதானா என்பதை சோதிப்பது அவசியம். இயன்றவரை ரோஸ் வாட்டரை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது நல்லது. கூந்தலை அழுக்கு போக அலசிய பிறகு கண்டிஷனரிங் செய்த பிறகு ரோஸ் வாட்டர் 5 கப் அதனுடன் வேப்பிலை சாறையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை கூந்தல் முழுக்க தடவி அலசவும். இது இயற்கையான கண்டிஷனராக செயல்படும். அதோடு கூந்தலுக்கு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும்போது கொஞ்சம் ரோஸ் வாட்டரை சேர்த்து பயன்படுத்தலாம். பொடுகு உங்களை விட்டு ஓடிவிடும்.

வெந்தயம்:

கூந்தல் பராமரிப்புக்கு என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, காலையில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதை முடியின் மயிர்க்கால்கள் நன்றாக படும்படி தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக தேய்த்து குளியுங்கள். பொடுகு மட்டுமல்லாமல் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யக் கூடியது இது.

வெந்தயத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும். எனினும் வெந்தயம் உடம் பிற்கு குளிர்ச்சி என்பதால் குளிர்ச்சியான உடல் நிலையைக் கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு:

இரண்டு முட்டைகளின் வெள்ளை கருவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். முட்டையின் வெள்ளைக் கரு கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் போஷாக்கைத் தருகிறது. பொடுகுத் தொல்லையையும் குறைக்க உதவி புரிகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து இறந்த செல்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைட்டமின் சி தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.பொடுகுத் தொல்லைக்கு சில டிப்ஸ்கள்:

* வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

* பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர் குளிக்கலாம்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்கலாம்.

* வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

மேற்சொன்ன டிப்ஸ்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல கல்யாணம் ஆகப் போகும் பெண்களும் இதை பயன்படுத்தலாம், பெரும்பாலும் பொடுகு தொல்லை வயதானவர்களை விட இளசுகளை தான் அதிகம் தாக்கும். மேற்சொன்ன முறைகளை பின்பற்றினால் பொடுகு தொல்லை இனி இல்லை என்ற நிலை ஏற்படும்.

 

 
Published by:Sivaranjani E
First published: