முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க முகம் டல்லா இருக்குனு ஃபீல் பண்றீங்களா..? ஒரே இரவில் பொலிவு தரும் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..

உங்க முகம் டல்லா இருக்குனு ஃபீல் பண்றீங்களா..? ஒரே இரவில் பொலிவு தரும் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..

பொலிவான சருமத்தை பெற

பொலிவான சருமத்தை பெற

கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்கள் முகத்திற்கு தற்காலிக பொலிவை மட்டுமே தரும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அழகான பளபளக்கும் சருமம் வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது.அதற்காக பல க்ரீம்களை முகத்தில் பயன்படுத்துவார்கள்.ஆனால் கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்கள் முகத்திற்கு தற்காலிக பொலிவை மட்டுமே தரும்.இப்படி பொழிவிழந்து காணப்படும் உங்கள் முகம் ஒரே இரவில் பளபளக்க வேண்டுமா? அப்படியானால் இந்த இயற்கையான வழிகளை பின்பற்றுங்கள்..

தேங்காய் எண்ணெய்: நம் வீட்டில் தேங்காய் எண்ணெயை தலைமுடிக்கும் பயன்படுத்துவோம்.ஆனால் தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் நல்லது.இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை வைத்து சருமத்தில் மசாஜ் செய்யுங்கள்.இது சரும பொலிவை அதிகரிக்க உதவும்.

பாதாம் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் போல பாதாம் எண்ணெயும் முகம் பொலிவிற்கு உதவும். இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை சுத்தமான நீரில் கழுவுங்கள்.பின்பு பாதாம் எண்ணெயை வைத்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி தினமும் நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக காணப்படும்.

கற்றாழை ஜெல்: சருமம் பளிச்சென இருப்பதற்கு ஈரப்பதம் முக்கியமான ஒன்று.சருமத்தில் ஈரப்பதம் இருக்க மாய்ஸ்சுரைசர் ( moisturizer ) நாம் பயன்படுத்துவது அவசியம்.இயற்கையான மாய்ஸ்சுரைசராக கற்றாழை திகழ்கிறது.இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி இரவு முழுவதும் உலற வைத்து காலையில் முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.

எந்த கெமிக்கல் டையும் இல்லாமல் அடர்த்தியான கருகரு கூந்தல் வேண்டுமா..? இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்கள்

பால் பேஸ் பேக் : சரும நிறத்தை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு காய்ச்சாத பச்சை பால் மிகவும் உதவும் என்று கூறலாம்.ஆம்.இரவு தூங்குவதற்கு முன்பு காய்ச்சாத பாலை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் முகத்தை கழுவுங்கள்.உங்களின் சருமம் பொலிவோடு காணப்படும்.

top videos

    முல்தானி மெட்டி பேஸ் பேக் : முகத்தை நீரில் கழுவி உலர வைத்து, பின் முல்தானி மெட்டியை தேனுடன் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து பின்பு சுத்தமான நீரில் கழுவுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இப்படி செய்து வந்தால் உங்கள் சருமம் பளப்பளத்தை நீங்கள் உணர்வீர்கள்.

    First published:

    Tags: Beauty Hacks