முகப்பருக்கள் இல்லா சரும அழகைப் பெற இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..!

”முகப்பருக்களை ஒழிக்க இந்த விஷயங்களை வாழ்க்கைமுறையோடு பின்பற்றுங்கள்”

முகப்பருக்கள் இல்லா சரும அழகைப் பெற இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..!
முகப்பருக்கள்
  • Share this:
முகப்பருக்கள் முகத்தின் தோற்றத்தையே பாழாக்கிவிடும். என்னதான் மேக்அப் செய்து மறைத்தாலும் எட்டிப் பார்க்கும் இந்த பருக்களை ஒழிக்க இந்த விஷயங்களை வாழ்க்கை முறையோடு பின்பற்றுங்கள்.

2 முறை முகம் கழுவுதல் : கூடுதல் எண்ணெய் சுரப்பு, தூசு, மாசு அழுக்கு போன்றவை சருமத் துளைகளை அடைத்துக்கொள்வதே பருக்கள் வர முக்கிய காரணம். எனவே அவற்றை நீக்க ஒரு நாளைக்கு 2 முறை முகம் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தோல் உரித்தல் : முகத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள் , வெண்புள்ளிகள் நீங்க வாரம் இரு முறை ஃபேஸ் ஸ்கிரப் அல்லது ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்வது அவசியம்.


சருமப் பொருட்களில் கவனம் : தூசு மாசுபாட்டை எதிர்க்கும் சருமப் பொருட்களை ( anti-pollution skincare products ) வாங்கிப் பயன்படுத்துங்கள். இதனால் சருமச் சிதைவுகளை தவிர்க்கலாம்.உணவில் கவனம் : தானியங்கள், ஊட்டச் சத்துமிக்க உணவுகள், காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். என்ணெய் பொருட்கள், பிரெட், பீட்ஸா, பாஸ்தா, சிப்ஸ் போன்ற பொருட்களில் உள்ள சர்க்கரை அளவு பருக்கள் வர காரணம் என்பதால் தவிர்த்தல் நல்லது.வாழ்க்கை முறையில் மாற்றம் : தண்ணீர் அதிகம் குடியுங்கள். கட்டாய உடற்பயிற்சியை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். காரசார உணவுகளை தவிர்த்தல் நல்லது. இது சருமத்தில் பிஹெச் அளவை தூண்டி பருக்கள் வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆல்கஹால் இல்லா பொருட்கள் : பயன்படுத்து சருமப் பாதுகாப்பு பொருட்களில் ஆல்கஹால் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இது எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும். பருக்களை உடைக்க வைத்து மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே பின்குறிப்பை படித்துவிட்டு வாங்கவும்.

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading