எண்ணெய் சருமம் முதல் மென்மையான சருமம் வரை... எந்த மாதிரியான அழகு பராமரிப்பு அவசியம்..?

ஆரோக்கியமான சருமம்தான் நம் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும்.

Web Desk | news18
Updated: June 28, 2019, 4:53 PM IST
எண்ணெய் சருமம் முதல் மென்மையான சருமம் வரை... எந்த மாதிரியான அழகு பராமரிப்பு அவசியம்..?
சருமத்திற்கு ஏற்ற உணவுகள்
Web Desk | news18
Updated: June 28, 2019, 4:53 PM IST
அழகான தோற்றத்திற்குச் சருமத்தின் ஆரோக்கியம் பொறுப்பு. சரும ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவுகள்தான் பொறுப்பு. அதற்குச் சரியான உணவுகளை உண்பது அவசியம். ஆரோக்கியமான சருமம்தான் நம் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் என்பார்கள். அது உண்மைதான்.

நான் ஆரோக்கியமான உணவுகளைதான் உண்கிறேன் இருப்பினும் சருமத்தில் இந்த பிரச்னை இருக்கிறது என்று புலம்புகிறீர்கள் எனில் அதற்கு நீங்கள் சருமத்திற்கு ஒவ்வாத உணவுகளை உண்கிறீர்கள் என்பதே காரணம். ஆம் ஒவ்வொருவரும் தங்களுடைய சருமத்திற்கு ஏற்ப சில உணவுகளை உண்பதும் தவிர்ப்பதும் அவசியம்.
வறண்ட சருமம் : வறண்ட சருமம் கொண்டோர் ஆலிவ் எண்ணெய், ரைஸ் பிராண்ட் ஆயில் ஆகிய எண்ணெய்களைச் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். ஒமெகா 3 ஃபேட் அடங்கிய வால்நட்ஸ், மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். அதைத்தவிர்த்து ஈரப்பதம் தக்க வைக்க மூன்று லிட்டர் தண்ணீர் தினமும் அருந்தலாம். காய்கறி , பழங்கள் ஜூஸ், குறிப்பாக லெமன் ஜூஸ் அல்லது இளநீர் தினமும் அருந்தினால் வறட்சியான சருமத்திலிருந்து தப்பிக்கலாம்.

எண்ணெய் சருமம் : எண்ணெய் சருமம் கொண்டோர் சர்க்கரை , சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் , பால் வகை உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாகப் பாதாம் பால், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், தானிய வகைகள் ஆகிய உணவுகளை அதிகமாக உட்கொள்ளலாம். முக்கியமாக எண்ணெய் சருமம் கொண்டோர் எண்ணெய்யில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.Loading...

சென்சிடிவ் சருமம் : உங்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால் அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்ற சரும அலர்ஜி ஏற்படுகிறதோ அந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஜங்க் ஃபுட் , காரமான ஸ்பைசி உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக முளைக் கட்டிய தானியங்கள், விதைகள், நட்ஸ், பழங்கள், சாலட்ஸ் , வைட்டமின் C மற்றும் E நிறைந்த பழங்கள் , காய்கறிகள் , ஒமேகா 3 அதிகமான உணவுகள் போன்றவற்றைத் தினசரி உணவுப் பழக்கத்தோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...