முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களே மார்புப் பகுதியில் உள்ள முடிகளை அகற்ற விரும்பினால் இவற்றை மறந்துவிடாதீர்கள்..!

ஆண்களே மார்புப் பகுதியில் உள்ள முடிகளை அகற்ற விரும்பினால் இவற்றை மறந்துவிடாதீர்கள்..!

வேக்ஸிங்

வேக்ஸிங்

  • Last Updated :

மார்பழகை காட்ட ஆண்கள் மார்புப் பகுதியில் முளைக்கும் முடிகளை வேக்ஸிங் செய்வார்கள். மார்புப் பகுதியில் உள்ள முடிகளை வேக்ஸிங் முறையில் எடுப்பது அத்தனை சாதாரண காரியமல்ல. வலி மிகுந்த அந்த செயலை செய்யும் முன் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

வேக்ஸிங் செய்ய கிரீம் பயன்படுத்துகிறீர்கள் எனில் நேரடியாக மார்பில் தடவாமல் காலிலோ அல்லது கையிலோ முடியிருக்கும் இடத்தில் தடவி சோதனை செய்வதுகொள்வது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள கெமிக்கல் உங்கள் சருமத்திற்கு ஒத்துப்போகிறதா அல்லது அலர்ஜியை உண்டாக்குகிறது என்பது தெரியும்.

அதேபோல் மார்புப் பகுதியில் வியர்வை அழுக்கு, ஈரம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவை கூட அலர்ஜியை உண்டாக்கலாம்.

ஸ்டிக்கர் அல்லது வேக்ஸிங் கிரீம் எது பயன்படுத்தினாலும் வலி உண்டாகும். அந்த வலியைக் குறைக்க முடி நீளமாக இருந்தால் கத்தரியால் வெட்டிவிட்டு அதன்பிறகு வேக்ஸிங் செய்யுங்கள். அதிக முடிகளோடு செய்தால் வலி கூடுதலாக இருக்கும்.

வேக்ஸிங் கிரீம் அல்லது ஸ்டிக்கரை ஒட்டும்போது முடி எந்த வாட்டத்தில் வளர்கிறதோ அதற்கு எதிர் திசையில் ஒட்டி கிழிக்க வேண்டும். அப்போதுதான் முடி வேரோடு வரும். எரிச்சல், வலி இருக்காது.

முடிகளை நீக்கிய பின் அந்த இடத்தில் எரிச்சல் இருக்கும். எனவே அங்கு ஐஸ் கட்டி கொண்டு தேய்த்தால் எரிச்சல் குறையும். பின் மாய்ஸ்சரைசர் தடவுங்கள். எரிச்சல் குறையும். அடுத்ததாக இரண்டு நாட்களுக்கு லூஸான பணியன் டி.ஷர்ட் பயன்படுத்துங்கள். அதுதான் சருமத்திற்கு மென்மையாக இருக்கும். எரிச்சலைக் குறைக்கும்.

பார்க்க  : 

top videos

    First published: