ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஹேர் கலரிங் செய்திருந்தால் சுடு தண்ணீரில் தலை குளிக்க கூடாதா..? கலர் செய்த கூந்தலுக்கான ஹேர் கேர் டிப்ஸ்

ஹேர் கலரிங் செய்திருந்தால் சுடு தண்ணீரில் தலை குளிக்க கூடாதா..? கலர் செய்த கூந்தலுக்கான ஹேர் கேர் டிப்ஸ்

ஹேர் கேர்

ஹேர் கேர்

ஒரு சிலருக்குக் குளிர்ச்சியான தண்ணீரில் தலைக்கு குளிப்பார்கள், ஒரு சிலர் சூடான தண்ணீரில் குளிப்பார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அழகான, நீளமான, அலையலையான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கூந்தலுக்கு எந்த விதமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் பயன்படுத்த கூடாது என்பதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சாதாரணமாக இருக்கும் கூந்தலுக்கு இவ்வளவு மெனக்கெடல் தேவைப்படும்போது உங்கள் கூந்தலை நீங்கள் கலரிங் செய்திருந்தால், கலர் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது முக்கியம்.

நீங்கள் ஹேர் கலர் செய்த பிறகு நீங்கள் விரும்பும் ஹேர் கேர் பொருட்களை எல்லாம் பயன்படுத்த முடியாது. பல ஆயிரம் செலவு செய்து, அதை சரியாக பராமரிக்கவில்லை என்றால், கலரிங் பிக்மென்ட் வெகு சில நாட்களிலேயே சாயம் இழந்துவிடும். கலர் செய்த கூந்தலுக்கான எக்ஸ்க்ளூசிவ் பராமரிப்பு டிப்ஸ் இங்கே.

சல்ஃபேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துங்கள் :

பொதுவாகவே சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. நீங்கள் ஹேர் கலரிங் செய்திருந்தால் நிச்சயமாக சல்பேட் உள்ள ஷாம்பூவை தவிர்த்துவிட வேண்டும். சல்பேட்டுகள், உங்கள் கூந்தலில் இருக்கும் ஈரப்பதம், எண்ணைப்பசை, ஆகியவற்றை அகற்றி விடும். இதனால் உங்களுடைய கூந்தல் வறட்சி அடையும். அதுமட்டுமல்லாமல் கூந்தல் முனைகள் பிளவுபட்டு, விரைவிலேயே ஹேர் கலரிங்கிங் வண்ணம் மங்கிப் போகும். எனவே கலரிங் மாறாமல் இருப்பதற்கான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தலாம்.

ரெகுலராக கூந்தல் நுனியை டிரிம் செய்யுங்கள் :

கூந்தல் வறண்டு போனாலோ, கூந்தலின் நுனி பிளவுப்பட்டு வறட்சியாக காணப்பட்டாலோ கலரிங் விரைவில் ஃபேடாகிவிடும். எனவே நீங்கள் தொடர்ச்சியாக ஹேர் கலரிங் செய்வதாக இருந்தால், அவ்வப்போது நுனி முடியை நீங்கள் ட்ரிம் செய்ய வேண்டும். முடியின் நீளத்தை வெட்ட வேண்டாம், பிளவு பட்டிருக்கும் நுனிப்பகுதியை மட்டும் வெட்டினால் போதும்.

Also Read : தலையில் எண்ணெய் தடவுவதுதான் பொடுகு அதிகரிக்க காரணமா..? அதிர்ச்சி தரும் அழகுக்கலை நிபுணர்..!

தண்ணீரின் டெம்பரேச்ச்சரைப் பாருங்கள் :

ஒரு சிலருக்குக் குளிர்ச்சியான தண்ணீரில் தலைக்கு குளிப்பார்கள், ஒரு சிலர் சூடான தண்ணீரில் குளிப்பார்கள். நீங்கள் ஹேர் கலரிங் செய்து இருக்கும் பொழுது சூடான தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் கூந்தலின் வேரில் இருக்கும் சிறு சிறு துளைகளை திறந்து அதன் மூலம் உங்களுடைய கூந்தல் டெக்ஸ்சர் மற்றும் நிறம் ஆகியவற்றை பாதிக்கும். நிறம் வேகமாக மங்கத் துவங்கும். எனவே கலரிங் செய்திருப்பவர்கள் தலைக்கு குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

ஹேர்-ஸ்டைல்ங் செய்யும் போது கலரிங் பாதுகாப்புக்கு அதற்குரிய பொருட்கள் அவசியம்:

ஹேர் கலரிங் செய்தவர்கள், தங்களுடைய கூந்தலை விதவிதமாக ஸ்டைலிங் செய்து கொள்ள விரும்பினால் அந்த கலர் மங்காமல் அல்லது நிறத்தின் தன்மை குறையாமல் இருப்பதற்கு கூந்தல் கலரை பாதுகாப்பதற்கான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

Also Read : அதிகமாக ஷாப்பிங் செய்வது ஒருவித மனநோய் : விவரிக்கிறார் மனநல மருத்துவர்!

உதாரணமாக நீங்கள் ஹேர் கலரிங் செய்த பிறகு முடியை ஸ்ட்ரைட்னிங் செய்ய வேண்டுமென்றால் அந்த சாதனத்தில் இருக்கும் வெப்பம் உங்கள் ஹேர் கலரிங்கை பாதித்து, நீங்கள் கலரிங் செய்த சில நாட்களிலேயே அதனுடைய நிறம் மங்கி முழுவதுமாக காணாமல் போய்விடும். அதே போல முடியை சுருள் சுருளாக்க வேண்டும் அல்லது வேறு ஏதேனும் ஸ்டைல் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் கலர் பாதிக்காமல் இருக்க ஸ்ப்ரே, கிரீம் போன்ற பொருட்களை அப்ளை செய்து அதற்குப் பிறகு ஸ்டைல் செய்ய வேண்டும்.

கூந்தல் அழகாக இருக்க ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் :

எவ்வளவு கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினாலுமே, கூந்தல் இயற்கையாகவே ஊட்டத்துடன் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். கூந்தல் உடையாமல் வலுவாக இருக்க புரதச்சத்து தேவை. நீண்டு அடர்த்தியாக வளர்வதற்கு இரும்பு சத்து மற்றும் மினரல்களும் தேவை.

Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair coloring