Home /News /lifestyle /

சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்க புளித்த அரிசி நீர் போதுமா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்க புளித்த அரிசி நீர் போதுமா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

புளித்த அரிசி நீர்

புளித்த அரிசி நீர்

அரிசி நீரில் குறைந்த PH அளவைக் கொண்டுள்ளதால் முடி பராமரிப்பு மற்றும் முடி கண்டிஷனராக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் வலுவான முடி வேர்களை உருவாக்க மற்றும் நுனி முடி பிளவை சரி செய்யவும் உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
முடி வளர்ச்சி அதிகரிப்பு, சருமத்தில் உள்ள பருக்களைத் தடுப்பது தொடங்கி முகப் பராமரிப்பிற்கு உதவியாக உள்ளது புளிக்க வைக்கப்பட்ட அரிசி நீர் அல்லது அரிசி கழுவிய நீர்.

பெண்களுக்கு நீளமாக முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். இதற்காக பலவிதமான ஷாம்புகளை உபயோகிப்பார்கள். ஆனால் அதிலும் தீர்வு காணமுடியாத நிலையில் தான் புதிதாக வேறு ஏதும் முறைகள் உள்ளதா? என யோசிப்போம். இந்நிலையில் தான், சரும் மற்றும் கூந்தலின் அழகை உறுதி செய்வதற்கு புளிக்க வைக்கப்பட்ட அரிசி நீர் அல்லது கழுவிய அரிசி நீர் நல்ல தீர்வாக உள்ளது என்கிறது ஆய்வு.

பொதுவாக பழங்காலம் முதல் சீன மருத்துவத்தில் புளித்த அரிசி நீர் மிகவும் பிரபலமான பொருள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் நவீன கொரிய அழகுப் பொருட்களில் முக்கிய மூலப்பொருளாகவும் அரிசி நீர் பயன்படுத்தப்படுகிறது. புளித்த அரிசி நீரில் அதிக அளவு புரோபயாடிக்குகள் உள்ளதால், கணிசமாக மேம்படுத்தப்பட்ட செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உட்பட பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், நொதித்தல் என்பது ஈஸ்ட்கள், பாக்டீரியாக்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் ஒரு பொருளின் இரசாயன செயல்முறையாகும் உள்ளது. மேலும் வடகிழக்கு இந்தியாவில் உட்கொள்ளப்படும் மிகவும் பொதுவான பானங்களில் ஒன்றாக புளிக்கவைக்கப்பட்ட அரிசி பானங்கள் உள்ளதால் எவ்வித அச்சமின்றி உபயோகிக்கலாம் என்கிறது ஆய்வு. இதில் வேறு என்னென்ன நன்மைகள்? உள்ளது என்பது குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம்..புளிக்கவைக்கப்பட்ட அரிசி நீரின் நன்மைகள்:

புளித்த அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் முடி மற்றும் முக பராமரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.

காளான் சாப்பிடுவதில் இத்தனை பக்கவிளைவுகள் இருக்கா..? இது தெரியாம போச்சே..!

அரிசி நீரில் குறைந்த PH அளவைக் கொண்டுள்ளதால் முடி பராமரிப்பு மற்றும் முடி கண்டிஷனராக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் வலுவான முடி வேர்களை உருவாக்க மற்றும் நுனி முடி பிளவை சரி செய்யவும் உதவுகிறது.

புளித்த அரிசி நீரை நாம் உபயோகிக்கும் போது முடி தண்டுகளின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. எனவே நீளமான மற்றும் அடர்த்தியான முடியை நாம் பெற முடியும். எனவே அரிசி தண்ணீரை சுமார் 20 நிமிடங்கள் தலை முடியில் ஊறவைத்து பின்னர் தேய்த்துக்குளித்தால் கூடுதல் பலனளிக்கும்.சருமப் பராமரிப்பிற்கு அரிசி நீர்:

பொதுவாக பெண்கள் அழகான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக அழகு நிலையங்கள் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால் செலவு அதிமாகுமோ என்ற அச்சத்தில் பலர் செல்வதைத் தவிர்ப்பார்கள். இனி அந்த கவலை வேண்டாம்.. உங்கள் வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தியே சரும பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்..

PCOS வந்துவிட்டால் கூடவே இந்த பிரச்சனைகளும் வந்துவிடுமா..? ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள்...

குறிப்பாக புளித்த அரிசி நீரை முகப்பராமரிப்பிற்கு நாம் உபயோகிக்கும் போது, வயதானத் தோற்றத்திற்கு காரணமான எலாஸ்டேஸ் என்ற நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிறது. எனவே தினமும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி நீர் மற்றும் அரிசி நீரில் முகத்தைக் கழுவும் போது எப்போதும் இளமையாக இருக்க முடியும். இதோடு சருமத்தைப் பிரகாசமாக்குவதும், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பளபளப்பாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவியாக உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Skin Care

அடுத்த செய்தி