ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முகத்தில் வேக்சிங் செய்வதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் என்னென்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

முகத்தில் வேக்சிங் செய்வதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் என்னென்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

வேக்சிங்

வேக்சிங்

முகத்தில் உள்ள முடியை அகற்றும் போது, ​​வேக்சிங் போன்ற வழிகளை பின்பற்றுவோம். இது அழகிய தோற்றத்தை கொடுக்க உதவினாலும், பல வித பாதிப்புகள் இதில் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முகத்தின் அழகை பராமரிக்க நாம் எண்ணற்ற வழிமுறைகளை செய்வோம். நாம் கடைபிடிக்கும் சில குறிப்பிட்ட முக பராமரிப்பு வழிகள் பல பாதிப்புகளை நம் சருமத்திற்கு உண்டாக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் செய்ய கூடிய வேக்சிங் போன்ற முறைகளும் அடங்கும். ஒருவரின் தோல் பராமரிப்பு வழக்கத்தின் மிக முக்கியமான பகுதியாக முகம் இருக்கிறது.

நம் முகத்தில் உள்ள தோல் நம் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் நமது முகம் தான் வெளி உலகில் அதிக தொடர்பை கொண்டிருக்கிறது. முகத்தில் உள்ள அழுக்குகள், மாசுக்கள் போன்றவற்றை நீக்க பலரும் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவார்கள். மேலும், முகத்தில் உள்ள முடியை அகற்றும் போது, ​​வேக்சிங் போன்ற வழிகளை பின்பற்றுவோம். இது அழகிய தோற்றத்தை கொடுக்க உதவினாலும், பல வித பாதிப்புகள் இதில் உள்ளன.

ஆனால் சிலருக்கு இதன் பக்க விளைவுகள் பற்றி தெரிவதில்லை. முகத்தில் முடி வளர்வது பலருக்கு பிடிப்பதில்லை. இதனால் தான் அவற்றை வேக்சிங் செய்து நீக்க நினைக்கிறோம். இருப்பினும் இந்த வேக்சிங் முறை தோல் வெடிப்பு, அலர்ஜி, அரிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடும். ஹார்மோன்கள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளின் அடிப்படையில் பெண்களுக்கு முகத்தில் அதிக அளவில் முடி வளர்த்து விடுகிறது.

இதை சரிப்படுத்தும் விதமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை வழக்கமான அடிப்படையில் அகற்ற விரும்புகின்றனர். சிலர் வீட்டில் செய்ய கூடிய வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ​​சிலர் முகத்திற்கு வேக்சிங் அல்லது த்ரெடிங் போன்றவற்றை தேர்வு செய்கின்றனர்கள். ஆனால், இந்த வழிகள் சரியானதல்ல என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது போன்று வேக்சிங் செய்வது சருமத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகின்ற்னர்.

நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

முகத்தில் வேக்சிங் செய்தால் இது வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கொப்புளங்கள், தோல் வெடிப்புகள், ஒவ்வாமை எதிர்வினைகள், முடி வளர்ச்சி, தோலில் ரத்தப்போக்கு மற்றும் பல பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இது முன்கூட்டியே முதுமை அடையவும் வழி செய்கிறது. எனவே உங்கள் முகத்தை வேக்சிங் செய்து வந்தால், அந்த பழக்கத்தை இப்போதே நிறுத்துங்கள்! இது மிக மோசமான ஒன்றாகும் என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேக்சிங் செய்வதால் ஒவ்வொரு முறையும் தோலின் ஒரு அடுக்கை அது கிழித்துவிட கூடும். 15 நாட்களுக்கு ஒருமுறை வேக்சிங் செய்து வந்தால் காலப்போக்கில், உங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகும். மேலும் உங்கள் சருமம் வறண்ட அல்லது சென்சிடிவ் வகை சருமமாக இருந்தால், வேக்சிங் முறை அதன் சிராய்ப்பு தன்மையால் அந்த பிரச்சனைகளை அதிகப்படுத்தும். உங்களுக்கு மெல்லியதாக முகத்தில் முடி வளர்ந்திருந்தால், மெல்லிய ரேஸர் பிளேடைப் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்கள் முகத்தில் உள்ள முடி அடர்த்தியானதாக இருந்தால், லேசர் ப்ளீச்சிங்கை முயற்சி செய்யலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Skincare, Waxing