முகத்தை மசாஜ் செய்வதன் மூலம்தான் முகத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து ஃபிரெஷாக தோன்றுகிறது. அதனால்தான் இந்த ஃபேஷியல் விஷயங்கள் பிரபலமாக இருக்கின்றன. அப்படி வெந்தையத்தை கிரீம் செய்து வைத்து அவ்வபோது மசாஜ் செய்வதால் முகம் எப்போதும் பளிச்சென இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெந்தையம் - 2 tsp
வைட்டமின் ஈ எண்ணெய் - 1
தேங்காய் எண்ணெய் - 1 tsp
வாசனை திரவியம் - 2 சொட்டு
வெந்தையத்தை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள்.
மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜெல் பதத்தில் வரும்.
பின் அதில் தேங்காய் என்ணெய், வைட்டமின் ஈ என்ணெய் மற்றும் தேவைப்பட்டால் நறுமணத்திற்கு வாசனை எண்ணெய் ஊற்றி நன்குக் கலக்குங்கள். இந்த கிரீமை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின்பு வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட முகம் ஜொலிக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.