சரும பாதிப்புகளை அகற்றும் முல்தானி மட்டி ஃபேஸ் மாஸ்க்

முல்தானி மட்டி இருந்தாலே போதும் வேறெந்த சரும பாதுகாப்பு பொருட்களும் வேண்டாம்.

news18
Updated: August 21, 2019, 6:01 PM IST
சரும பாதிப்புகளை அகற்றும் முல்தானி மட்டி ஃபேஸ் மாஸ்க்
முல்தானி மெட்டி
news18
Updated: August 21, 2019, 6:01 PM IST
பெண்களின் அழகு பராமரிப்பில் எப்போதும் முதலிடம் பிடிப்பது முல்தானி மட்டியைப் பயன்படுத்தி முகத்தை பளிச்சென மாற்றும் ஃபேஸ் மாஸ்க்குகள் பற்றி பார்ப்போம்.

பளபளக்கும் முகம்

தேவையான பொருட்கள்


முல்தானி மட்டி - 1 tbsp

தக்காளிச் சாறு - 1 tbsp

சந்தனம் - 1/4 tbsp

Loading...

மஞ்சள் - ஒரு சிட்டிகை

செய்முறை : மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். முகத்தில் சீராகத் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் முகம் பளபளவென ஜொலிக்கும்.

எண்ணெய் சருமத்திற்காக

தேவையான பொருட்கள்

முல்தானி மட்டி - 1 tbsp

சந்தனம் - 1 tbsp

ரோஸ் வாட்டர் - 2 tbsp
பால் - 1 tbsp

செய்முறை : அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்டக்கி முகத்தில் தேய்க்கவும். 20 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினசரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.ஜொலிக்கும் முகம்

தேவையான பொருட்கள்

பப்பாளி - 1/2 கப்

தேன் - 1 tbsp

முல்தானி மட்டி - 1 tbsp

செய்முறை : பப்பாளியை நன்கு குழைத்து அதில் தேன், முல்தானி மட்டி சேர்த்து பேஸ்ட்போல் கலக்கவும். முகத்தில் சீராகத் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நீங்களே நம்ப முடியாத அளவிற்கு முகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். இதை வாரம் மூன்று முறை செய்தால்தான் அந்த பலன் கிடைக்கும்.

சூரிய வெளிச்சத்தான் வரும் கருமையை நீக்க

தேவையான பொருட்கள்

முல்தானி மட்டி - 1 tbsp

தக்காளி சாறு - 1 tbsp

எலுமிச்சை சாறு - 1 tbsp

பால் - 1 tbsp

தேன் - 1 tbsp

செய்முறை : அனைத்து பொருட்களையும் கலக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காத்திருக்கவும். குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகம் சீரான நிறத்திற்கு மாறும் அதிசயத்தை காணலாம்.வறண்ட சருமத்திற்காக

தேவையான பொருட்கள்

பாதாம் - 4

குளிர்ந்த பால் - 1 tbsp

முல்தானி மட்டி - 1 tbsp

தேன் - 1 tbsp

செய்முறை : பாதாமை மைய அரைத்துக்கொள்ளவும். பின் மற்ற பொருட்களைச் சேர்த்து பேஸ்டாக கலக்கவும். முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வர நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...