முகத்தை பிளீச்சிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளும்... பக்கவிளைவுகளும்..!

பிளீச்சிங்

செயற்கை தயாரிப்புகளுடன் முக சருமத்தை பிளீச்சிங் செய்து கொள்வதால் தற்காலிக நன்மைகளுடன் சேர்ந்து சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • Share this:
ஆண், பெண் என பியூட்டி பார்லர்களுக்கு செல்வோர் அனைவரும் தவறாமல் செய்து கொள்ளும் ஒன்றாக இருப்பது முகத்தை வெண்மையாக்கும் பேஷியல் பிளீச்சிங். சில மாதம் தவறாமல் பியூட்டி பார்லர் சென்று தங்களது சருமத்தை பிளீச்சிங் செய்து கொள்வார்கள்.

குறிப்பாக வெயிலில் செல்வதால் சூரிய கதிர்களால் ஏற்படும் தோல்நிற பிரச்சனையை போக்கி சருமத்தையும், முடியையும் பிளீச்சிங் ஒளிர செய்கிறது. செயற்கை தயாரிப்புகளுடன் முக சருமத்தை பிளீச்சிங் செய்து கொள்வதால் தற்காலிக நன்மைகளுடன் சேர்ந்து சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ப்ளீச்சிங் தயாரிப்புகளில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளது. இது சருமத்தை நேரடியாக ஒளிரச் செய்யாது. சருமத்தில் உள்ள முடியையே ஒளிரச் செய்கிறது. இதன் மூலம் நம்மை பிரகாசமாகவும் அழகாகவும் உணர வைக்கிறது. ஆனால் இது நம் சருமத்தில் உள்ள மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது.பிளீச்சிங் செய்வதன் நன்மைகள்:

 

* சமமான ஸ்கின் டோன்: பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் அகற்றப்படுகின்றன. இதனால் முகம் புதுப்பொலிவு பெறும். நமது சரும நிறத்திற்கு காரணமான மெலனின் தன்மையை பொருத்து நமக்கு சீரற்ற ஸ்கின் டோன் உள்ளது. ப்ளீச் செய்து கொள்வது இதற்கு ஒரு தற்காலிக தீர்வைக் கொடுக்கும் நீண்ட கால தீர்வை அல்ல.

* டார்க் ஸ்பாட்ஸை குறைக்கும்: வயது ஏறுவது, சூரிய ஒளி பாதிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் டார்க் ஸ்பாட்ஸ்கள் மீது பிளீச்சிங் நன்கு வேலை செய்கிறது. நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் புள்ளிகளை நீக்க இது சிறந்த தற்காலிக வழி.

* முக பிரகாசம்: சருமத்தை சரியாக கவனித்து கொள்ளாத போது பெரும்பாலும் சருமம் டல்லாகவே இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். முக சருமத்தில் நிறைய முடி இருந்தால் லேசர் சிகிச்சை பணத்தை மிச்சப்படுத்தி கூறிவந்த செலவில் செய்யப்படும் ப்ளீச்சிங் ஒரு வரம்.

How to de tan naturally at home

பக்க விளைவுகள்:

* மெர்குரி விஷம்: இன்று வரை சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் பாதரச நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இது மிகவும் ஆபத்தானது மேலும் பாதரசம் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து மீள நீண்ட ஆண்டுகள் ஆகும்.

சன் டேனில் இருந்து உங்கள் சருமத்தை இயற்கையாக பாதுகாக்கும் வழிமுறைகள்!

* தோல் அழற்சி: பிளீச்சிங் செய்த பின் உங்கள் சருமத்தின் சில பகுதிகளில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால், உங்களுக்கு டெர்மடிடிஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை மிகவும் லேசாக மற்றும் நமைச்சலாக மாற்றும் ஒரு நிலையாகும். இந்நிலை முகத்தில் மட்டுமல்ல அக்குள், மேல் மார்பு மற்றும் இடுப்பு ஆகியவற்றிலும் உருவாகலாம். முகத்தில் ப்ளீச் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் முக்கிய பக்க விளைவு இதுவாக குறிப்பிடப்படுகிறது. கொப்புளங்கள், சிவத்தல், படை நோய், அரிப்பு, வீக்கம் மற்றும் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தோல் அழற்சிக்கு பிளீச்சிங் கிரீம்கள் தான் பெரும்பாலும் காரணமாகின்றன.

ஸ்டீராய்டு முகப்பரு: கார்டிகோஸ்டீராய்டுகளை கொண்ட ப்ளீச்சிங் கிரீம்ககளை பயன்படுத்துவதன் காரணமாக இது ஏற்படுகிறது. கைகள்,பின்புறம் மற்றும் உடலின் எந்தப் பகுதிகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அங்கு ஏற்படும். வொயிட்ஹெட்ஸ், சிவப்பு புடைப்புகள், பிளாக்ஹெட்ஸ் இதன் அறிகுறிகள். இது சிகிச்சையளிக்கக்கூடிய மிகவும் பொதுவான பக்க விளைவாக குறிப்பிடப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published: