ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பது எப்படி? 

குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பது எப்படி? 

குழந்தையின் குளிர்கால சரும பராமரிப்பு

குழந்தையின் குளிர்கால சரும பராமரிப்பு

பச்சிளம் குழந்தை மீது பால் வாசம் அதிகம் வீசும் என்பதால், வாசனை மிக்க பவுடர்கள் மற்றும் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் குழந்தை மீது நறுமண பொருட்களைப் பயன்படுத்துவது அவர்களுக்கு தேவையற்ற அலர்ஜியை உருவாக்கக்கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பருவ காலங்கள் மாறுவதற்கு ஏற்றார் போல் சருமத்தை பராமரிப்பது என்பது பெரியவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், குழந்தைகளின் சரும பராமரிப்பு என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய கவலையாகும். குறிப்பாக குளிர்காலத்தில் குழந்தைகளை சளி, காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் பிற தொற்று நோய்களிடம் இருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் தேவைப்படும். அந்த சமயத்தில் தான் நோய் மற்றும் வறட்சியால் குழந்தையின் சருமம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தற்போது குளிர்காலம் நெருங்கி வருவதால், தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் சிறப்பு கவனிப்பை தர வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக மென்மையான அவர்களுடைய சருமத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது ஆகும். எனவே தான் குளிர்காலத்தில் குழந்தையின் சருமத்தை பராமரிக்க உதவும் சில குறிப்புகள் தொடர்பாக, டாக்டர் பத்ராவின் ஹெல்த்கேரின் எமிரிடஸ் நிறுவனரும் தலைவருமான டாக்டர் முகேஷ் பத்ரா பகிர்ந்துள்ளவை குறித்து இக்கட்டுரையில் விவரித்துள்ளோம்...

மென்மையான துணிகளை பயன்படுத்தவும்: குழந்தைகளின் சருமம் பெரியவர்களை விட அதிக உணர்திறன் கொண்டது. எனவே குளிர்காலத்தில் வறட்சி காரணமாக சொறி, சரும எரிச்சல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், சருமம் எளிமையாக சுவாசிக்கக்கூடிய மென்மையான பருத்தி துணிகளை அணிவிக்க வேண்டும்.

வாசனை திரவியங்களுக்கு தடை: பச்சிளம் குழந்தை மீது பால் வாசம் அதிகம் வீசும் என்பதால், வாசனை மிக்க பவுடர்கள் மற்றும் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் குழந்தை மீது நறுமண பொருட்களைப் பயன்படுத்துவது அவர்களுக்கு தேவையற்ற அலர்ஜியை உருவாக்கக்கூடும். எனவே குழந்தைகள் மீது பவுடர், பேபி ஆயில் போன்ற வாசனை மிக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, மருத்துவர்களின் பரிந்துரையின் படி இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

ஆயில் மசாஜ்: குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடைவதைத் தடுக்க குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். ஆலிவ் அல்லது அஸ்வகந்தா ஆகிய எண்ணெய்களைக் கொண்டு குழந்தையின் சருமத்தை அவ்வப்போது மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.

குளியல்: குளிர்காலத்தில் சளி பிடித்துவிடும், காய்ச்சல் வந்துவிடும் என அஞ்சி குழந்தைகளை ஒருமுறை குளிக்க வைக்கவே மிகவும் யோசிப்போம். ஆனால் குளிர்காலத்தில் குழந்தையை தினந்தோறும் இரண்டு முறை வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல் குளிர்காலம் என்பதால் அதிகம் சூடான தண்ணீரை கொண்டு குழந்தைகளை குளிக்க வைப்பது, அவரது தோலின் மீதுள்ள பாதுகாப்பு அடுக்குகளை பாதிக்கும் என எச்சரிக்கும் நிபுணர்கள், அதிக நேரம் குளிக்க வைப்பதையும் தவிர்க்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

கிளீனர் பயன்பாடு: குளியலுக்குப் பின் குழந்தையின் சருமம் வறட்சியாவதைத் தடுக்க, பால், கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட மென்மையான கிளீனர்களைப் பயன்படுத்துங்கள். இது குழந்தையின் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

ஈரப்பதம்: குளிர்கால வறட்சியில் இருந்து குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க, அதனை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக எண்ணெய், அதிமதுரம் போன்ற இயற்கையான பொருட்கள் அடங்கிய பேபி மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம். இவை குழந்தையின் சருமத்திற்கு ஊட்டமளித்து, மென்மையாக வைத்திருக்க உதவும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Baby Care, Skincare, Winter