கன்னாபிடியோல் (Cannabidiol) என்பதன் சுருக்கமே CBD. இது சுமார் 70 - 80 ஆண்டுகளுக்கு முன்னர் கஞ்சா செடிகளில் அடையாளம் காணப்பட்டது . கஞ்சா சாடிவா தாவரத்தில் (Cannabis Sativa plant) இருந்து உருவாகும் Cannabidiol பல சிகிச்சை நன்மைகளை வழங்கும் பல கன்னாபினாய்ட்ஸ்களில் (cannabinoids) ஒன்றாகும். பல ஆண்டுகளாக கஞ்சாவில் அடங்கி இருக்கும் குணப்படுத்தும் சக்தி அதாவது ஹீலிங் பவர் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. CBD தயாரிப்புகள் குடல் ஆரோக்கியம், பளபளப்பான சருமம் மற்றும் மனதை கட்டுப்படுத்த உதவும் என்று பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
CBD அனைவருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?
உள்ளபடியே நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்பதால் மற்ற எல்லா தயாரிப்புகளை போலவே CBD கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களும் வித்தியாசமாகவே வேலை செய்கின்றன. CBD அடங்கிய தயாரிப்புகள் ஒருவருக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறிப்பிட்ட நபரின் எடை, மரபியல், வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்றம் மற்றும் மிக முக்கியமாக, எண்டோகன்னாபினாய்டு அமைப்புடன் CBD எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை பொறுத்தது.
CBD-ஐ தோலில் பயன்படுத்த முடியாது என்பது உண்மையா?
இல்லை, பலருடைய தினசரி ஸ்கின் கேர் தயாரிப்புகளில் இன்று CBD திறம்பட நுழைந்து நல்ல பலனை கொடுத்து வருகிறது. க்ரீம்கள், பாடி ஆயில்ஸ், சால்வ்ஸ், தைலம், ரோல்-ஆன்கள் மற்றும் ஜெல் போன்ற நிறைய CBD அடங்கிய மேற்பூச்சுகள் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகின்றன, மேலும் இவற்றில் பெரும்பாலானவை நேரடியாக தோலில் அப்பளை செய்யும் வகையில் தான் வருகின்றன.
CBD வீக்கத்தைக் கட்டுப்படுத்துமா?
CBD ஆயில் வலியை நிவர்த்தி செய்ய உதவும் அதே நேரத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதியை ஆற்றவும், வறட்சி, அரிப்பு, தடிப்புகள் மற்றும் முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர வீக்கம், மூட்டுவலி மற்றும் விளையாட்டு காயங்களுக்கு நிவாரணம் வழங்க பலர் CBD கிரீமை பயன்படுத்துகிறார்கள்.
நகங்களை பராமரிக்காமல் விட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ்..!
வயதான தோற்றம் மற்றும் சுருக்கங்களை போக்குமா?
பல CBD ஆயில் தயாரிப்புகளில் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் E உள்ளதால், அவை வயதான அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும். சிறந்த பலனை பெற விரும்பும் ஒருவர் மார்க்கெட்டில் கிடைக்கும் உயர்தர CBD ஆயிலை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
CBD-ஐ பயன்படுத்துவது மோசமான அலர்ஜியை ஏற்படுத்தும் என்பது உண்மையா?
உடல், மன நலம் முதல் அழகு தேவைகள் வரை அனைத்திற்கும் பயன்படுத்த CBD முற்றிலும் இயற்கையானது. பல வாழ்க்கை முறை பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சக்தி இதற்குண்டு. பொதுவாக பாதுகாப்பான விருப்பமாக CBD இருந்தாலும் ஸ்கின் டைப்பை பொறுத்து ஒரு சில பேருக்கு செட் ஆகலாம், செட் ஆகாமலும் போகலாம். எனவே இதை உறுதி செய்ய CBD அடங்கிய ஸ்கின் கேர் பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தயாரிப்பு பொருட்கள் குறித்து நன்றாக படித்து பார்த்து பின்னர் வாங்கி பயன்படுத்தலாம். அப்படியும் சந்தேகம் இருந்தால் அந்த தயாரிப்பை உடலின் குறிப்பிட்ட பகுதியில் அப்ளை செய்து பேட்ச் டெஸ்ட் (patch test) செய்து பார்க்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.