Home /News /lifestyle /

N95 மாஸ்க் அணிபவர்கள் தங்கள் சருமத்தை பாதுகாக்க அவசியம் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்!

N95 மாஸ்க் அணிபவர்கள் தங்கள் சருமத்தை பாதுகாக்க அவசியம் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்!

N95 மாஸ்க்

N95 மாஸ்க்

பொலிவான சருமம் இருப்பவர்களுக்கு கூட சில சரும பாதிப்பை இது தரக் கூடும். எந்த அளவிற்கு உடல் நலம் முக்கியமோ அதே அளவிற்கு சரும பாதுகாப்பும் முக்கியமானதாகும்.

உலகெங்கும் கொரோனா பெருந்தொற்று அதிக அளவில் பரவி வருவதால், முகக்கவசம் அணிவது அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் கிருமிகளை அதிக அளவில் தடுக்கும் N95 மாஸ்க்கை அணிவது மிக முக்கியமானது. சிலருக்கு இது போன்று முகக்கவசம் அணிவதால் சருமம் பாதிக்கப்படுகிறது. பொலிவான சருமம் இருப்பவர்களுக்கு கூட சில சரும பாதிப்பை இது தரக் கூடும். எந்த அளவிற்கு உடல் நலம் முக்கியமோ அதே அளவிற்கு சரும பாதுகாப்பும் முக்கியமானதாகும். எனவே நீங்கள் முகக்கவசம் அணிந்தாலும் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்றினால் சருமம் எப்போதும் போல ஆரோக்கியமாக இருக்கும். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

நீரேற்றம் : 

சரும பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருப்பது தான். சருமம் பொலிவு இல்லாமல் இருப்பதற்கும், ஆரோக்கியமற்று இருப்பதற்கும் முக்கிய காரணம் இது தான். எனவே எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க மாயூச்சரைசர் அவ்வப்போது பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பை தரும். நீங்கள் பயன்படுத்தும் மாயூச்சரைசரில் எஸ்.பி.எஃப் (spf) உள்ளதா என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது தான் அதீத சூரிய ஒளியில் இருந்து நம்மை பாத்துக்க உதவும்.



எஸ்.பி.எஃப் :

பரந்த-ஸ்பெக்ட்ரம் எஸ்.பி.எஃப் உள்ள புராடக்ட்களை பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயமாகும். பெரும்பாலும் வெளியே செல்வதற்கு முன் N-95 முகமூடியை அணிந்திருப்பதால், சன்ஸ்கிரீனைப் போடுவதால் எந்தப் பயனும் இல்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால், இது அப்படி இல்லை. சன்ஸ்கிரீன் லோஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் தோலிற்கு எந்த பாதிப்பும் ஏற்படலாம் இருக்க இது உதவுகிறது.

பொங்கலுக்கு ட்ரெடிஷ்னல் லுக்கில் அசத்த வேண்டுமா..? இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

ஆன்ட்டி ஆக்சிடென்ட் சீரம் :

ஈரப்பதம் அதிகம் தர கூடிய ஹைட்ரேட்டிங் சீரம்களை, சில துளிகள் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம். சீரமில் அதிக அளவில் வைட்டமின் பி5 நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவும். நாள் முழுவதும் உங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமெனில், சீரம் அவசியம் பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் சருமம் வயதானது போன்று இல்லாத தோற்றத்தையும் இது தரும்.



ஃபேஸ் ஷீட் :

சருமத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் வைத்துக்கொள்ள, ஊட்டசத்துக்கள் கொண்ட ஃபேஸ் ஷீட் மாஸ்க் (Nutrition Sheet Mask) மிகவும் உதவும். மாயூசரைசர் அல்லது லோஷன் போன்று இவற்றை தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். இது உங்கள் சருமத்தை முற்றிலுமாக மாற்றி விடும். மேலும் இதில் வைட்டமின் சி உள்ளதால், நன்றாக பொலிவு தரும்.

மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Corona Mask, Skin Care

அடுத்த செய்தி