முட்டையில் மேக்அப் செய்த பெண்: இன்ஸ்டாகிராமை கலக்கிய வீடியோ!

அவரே எதிர்பாராத விதத்தில் மிகவும் வைரலாகப் பரவி இன்ஸ்டாகிராமின் அதிகமாக லைக் செய்யப்பட்ட வீடியோ என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது.

முட்டையில் மேக்அப் செய்த பெண்: இன்ஸ்டாகிராமை கலக்கிய வீடியோ!
அவரே எதிர்பாராத விதத்தில் மிகவும் வைரலாகப் பரவி இன்ஸ்டாகிராமின் அதிகமாக லைக் செய்யப்பட்ட வீடியோ என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது.
  • Share this:
உங்களிடம் ஒரு முட்டை கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதிகபட்சமாக சமைத்து சாப்பிடுவோம் அல்லது முக அழகு , தலை பராமரிப்பிற்காகப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த முட்டையை வைத்து ஓர் உலக சாதனையே படைத்துள்ளார்.

egg makeup ,முட்டை மேக்அப்

சமீபத்தில் `world record egg’ என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில், ஒரே ஒரு முட்டையை மட்டும் அப்ளோட் செய்து ‘கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராம் சாதனையை முறியடிக்க இந்த முட்டைக்கு லைக் போடுங்கள்’ என்கிற வாசகத்தோடு அப்ளோட் செய்யப்பட்டது. ஆனால் அந்த அக்கவுன்ட் யாருடையது என்பதும் தெரியாது. கைலி ஜென்னர் தனக்குக் குழந்தை பிறந்ததை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உலகின் அதிகம் லைக் செய்யப்பட்டவர் என்கிற பெருமையைக் கொண்டவர்.


அதற்காக பலரும் லைக்ஸ் போட்டு அந்த முட்டையை வைத்து பல கற்பனைத் திறமைகளைக் கையாண்டு புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்கள். கைலி 18 மில்லியன் லைக்குகள் வாங்கியிருந்தார். தற்போது அந்த முட்டைப் பதிவு 50 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தற்போது அதே முட்டையை வைத்து ரஷ்யாவைச் சேர்ந்த பெண்  முழுமையான பெண் உருவத்தை வரைந்து சமூக வலைதளத்தையே புரட்டிப்போட்டிருக்கிறார்.


 
View this post on Instagram

 

A post shared by SONYA MIRO (@sonya_miro) on


வைரலாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த முட்டை மேக்அப் வீடியோவை அப்லோட் செய்தவர் சோன்யா மிரோ. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்ட சோன்யா மேக்அப் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேக்அப்பில் எப்போதும் ஏதாவதொரு புதுமைகளைச் செய்து கொண்டிருப்பார். அப்படித்தான் இந்த முட்டை வீடியோவையும் அப்லோட் செய்திருந்தார்.

ஆனால் அவரே எதிர்பாராத விதத்தில் மிகவும் வைரலாகப் பரவி இன்ஸ்டாகிராமின் அதிகமாக லைக் செய்யப்பட்ட வீடியோ என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது. அதாவது 7 நாட்களுக்கு முன் அப்லோட் செய்யப்பட்ட அந்த வீடியோ 60,004,043 லைக்குகளைப் பெற்று இன்ஸ்டாகிராமின் அதிகம் லைக் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கிறது.  தற்போது அந்த வீடியோ world record egg அக்கவுண்ட் கொண்டிருந்த லைக்ஸ் எண்ணிக்கையை விட அதிகமாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் ஒரு முழுமையான மேக் அப்பிற்குப் பயன்படுத்தப்படும் ஃபவுண்டேஷன் க்ரீம் தொடங்கி ஐ லாஷ், லிப்ஸ்டிக் , க்ளிட்டர் என ஒவ்வொரு ஸ்டெப்பாக அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். இறுதியில் பெண் உருவத்தைக் கொண்ட முட்டை படம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
First published: January 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்