ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெயிலால் பொலிவிழக்கும் கைகள்..! உங்க வீட்டு கிச்சனில் இருக்கு தீர்வு !

வெயிலால் பொலிவிழக்கும் கைகள்..! உங்க வீட்டு கிச்சனில் இருக்கு தீர்வு !

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமடைய செய்கிறது.

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமடைய செய்கிறது.

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமடைய செய்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் நமது சருமம் மந்தமாக பொலிவிழுந்தும், வறட்சியாக காணப்படும். சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் நமது சருமத்தில் மேற்பரப்பில் கருமையை உண்டாக்குவது மட்டுமல்லாமல் தோலின் அடுத்த அடுக்கிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வயதான தோற்றம் ஏற்படும். எனினும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து நம் கைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினம் அல்ல, தற்போது எண்ணற்ற க்ரீம்கள் விற்பனைக்கு வந்தாலும் சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இந்த பிரச்சனையை சரி செய்யலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தயிர் மற்றும் மஞ்சள் தூள்:

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமடைய செய்கிறது. அதே நேரத்தில் மஞ்சள் கோடை வெப்பத்தால் பாதிப்படைந்த சருமத்தை மேம்படுத்துகிறது. ஒரு கிண்ணத்தில் தயிர், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் கைகளில் எடுத்து பாதிப்படைந்த சருமத்தில் அப்ளை செய்து சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடை வெப்பத்தால் உருவான சன் டேன் மறையும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி புற ஊதா கதிர்களிடமிருந்து தோல் செல்களைப் பாதுகாக்கிறது. எலுமிச்சை சாற்றை ஒரு கிண்ணத்தை எடுத்து, பாதிப்பு உள்ள கை பகுதிகளில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் உங்கள் கைகளை கழுவவும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமிலம் உங்கள் சருமத்தின் கருமையை நீங்கி கைகளை அழகாக்கும்.

பாதாம் பேஸ்ட்:

பாதாம் பருப்பில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தைப் பாதுகாத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு பவுலில் 5 முதல் 6 பாதாம் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை இந்த பாதாம் பருப்புகளை எடுத்து பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை கைகளில் தடவி இரவு முழுவதும் விட்டுவிட்டு மறுநாள் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்:

சந்தனம் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை கொண்டது. 2 டீஸ்பூன் சந்தன தூள் மற்றும் மஞ்சள் தூள் எடுத்து, அதனுடன் 2 முதல் 3 சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து ஒன்றாக கலந்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை உங்கள் கைகளில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த பேஸ்ட் சேதமடைந்த பகுதிகளுக்கு சிகிச்சையளித்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். இதனால் உங்கள் கைகள் இழந்த நிறத்தை பெரும்.

Must Read | உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடவே கூடாத 7 உணவுகள்!

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்லில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நமது தோல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கடைகளில் இருந்து வாங்கும் கற்றாழை ஜெல்லை விட வீட்லேயே காற்றாழை இதழை எடுத்து அதிலிருந்து தெளிவான ஜெல்லை பிரித்து எடுத்து ஒரு முறை கழுவிட்டு நன்கு அரைத்து அந்த ஜெல்லை நேரடியாக பயன்படுத்தலாம். இரவில் உங்கள் கைகளில் தடவி விட்டு மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெள்ளரிக்காய் பேஸ்ட்:

வெள்ளரிக்காயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் சருமத்தை புதுப்பித்து, இழந்த பளபளப்பை மீண்டும் பெற உதவும். இதற்கு இரண்டு வெள்ளரிக்காயை எடுத்து அதனை நன்கு அரைத்து சாற்றை எடுத்து அதில் சில சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பேஸ்டை உங்கள் கைகளில் தடவி 30 நிமிடங்கள் கழுவவும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

Published by:Archana R
First published:

Tags: Beauty Tips, Hand Care, Lifestyle