இந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாமாம்...! ஆராய்ச்சியாளர் சொல்வதை கேளுங்களேன்...

பெரும்பாலானோருக்கு வழுக்கை வருவதற்கான முக்கியக் காரணம் மரபணு முறை.

news18
Updated: June 22, 2019, 1:19 PM IST
இந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாமாம்...! ஆராய்ச்சியாளர் சொல்வதை கேளுங்களேன்...
வழுக்கை தலை
news18
Updated: June 22, 2019, 1:19 PM IST
அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை உண்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம் என லண்டனைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பஷர் பிஸ்ரா ( Bashar Bizrah ) கூறியுள்ளர்.

பொதுவாக பெரும்பாலானோருக்கு வழுக்கை வருவதற்கான முக்கியக் காரணம் மரபணு முறை என்கிறார் பஷர். இதுதவிற உடல் நலன் குறைவு, முடியின் வேர்களின் சிதைவு , மனதளவில் பிரச்னை போன்றவையே அடுத்தடுத்தக் காரணங்கள் என்கிறார்.

இதற்க்கு தொடர்ந்து சரியான ஊட்டசத்தை எடுத்துக் கொண்டால் முடி இழப்பு பிரச்னையை தடுக்கலாம். ஆரோக்கியமான முடி வளர்ச்சி கிடைக்கும் என்கிறார். இதற்காக உடலுக்கும், முடி வளர்ச்சிக்கு உதவக் கூடிய அதிக ஊட்டச்சத்து நிறைந்த சில பழங்களை அதில் பரிந்துரைக்கிறார். இந்த பழங்களை உண்டால் உங்களுக்கு வழுக்கை வராமல் தடுக்க உதவும் என்றும் கூறுகிறார் பஷர்.
பப்பாளி : ஒவ்வொரு முடிக்குமான ஊட்டச்சத்துகள் சீராக கொண்டு சேர்க்கும் வல்லமை பப்பாளியில் இருக்கிறது. இது புதிய முடி உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் ஒரு முழு பப்பாளியில் 235 மில்லி கிராம் விட்டமின் C இருப்பதாகவும் அது முடி வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.Loading...

அன்னாசி பழம் : சுற்றுச்சூழல் மாசுபாட்டால் முகம் மட்டுமல்ல தலை முடி வேர்களும் பாதிக்கப்படும். குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள். அதற்கு அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின் C மெக்னீசியம், விட்டமின் B6 ஆகியவை மட்டுமன்றி அதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் (flavonoids) ஃபினோலிக் ஆசிட் (phenolic acids) என்று சொல்லக் கூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பது வேர் செல்களின் பாதிப்புளை பழுது பார்த்து முடி வளர்ச்சியைத் தூண்டும்.பீச் பழம் : பெரும்பாலும் தலை முடி வேர்கள் வறட்சி அடைந்தாலும் முடி உதிர்தல் பிரச்னை வரும். இதற்கு பீச் பழத்தில் உள்ள விட்டமின் A , C தான் சரியான தீர்வு. அவை இரண்டும் ஈரப்பதத்தை அள்ளி வழங்கும் ஆற்றல் கொண்டவை. இதை ஜூஸாக குடித்ததாலும், அரைத்து வேர்களில் தடவியதாலும் முடி வளர்ச்சி அதிகரித்த தரவுகளும் உள்ளன என்கிறார் ஆராய்ச்சியாளர்.கிவி பழம் : தலை முடி ஆரோக்கியமாக வளர இரத்த ஓட்டம் வேர்களுக்கு சீராகப் பாய வேண்டும். கிவி பழத்தில் விட்டமின் A, C , E மற்றும் K ஆகியவை நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி ஸிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன. இவை தலை முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல கருகரு கூந்தலுக்கும் உத்திரவாதம் அளிக்கும்.ஆப்பிள் : ஆப்பிள் தலையின் வேர்களில் புதிய முடிகள் வளர உதவும் என ஜப்பானில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் உள்ள விட்டமின் A , B , C ஆகியவை பொடுகுத் தொல்லைகளிலிருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் கெட்ட செல்களை நீக்கி தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
First published: June 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...