முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

keep your skin moisturized

keep your skin moisturized

குளிர்காலத்தில், வறண்ட மற்றும் வெப்பக் காற்றின் வெளிப்பாடு தோல் வறட்சியை ஏற்படுத்தும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைவாக இருப்பதால், தோல் வறண்டு இறுக்கமாகிவிடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர் காலம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நம் சருமத்திலும் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் சருமப் பராமரிப்பு கோடைகால சருமப் பராமரிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் குளிர்காலத்தில் நமது சருமம் வேகமாக வறண்டுவிடும், மேலும் ஈரப்பதத்தைத் தக்கவைக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

குளிர்காலத்தில், வறண்ட மற்றும் வெப்பக் காற்றின் வெளிப்பாடு தோல் வறட்சியை ஏற்படுத்தும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைவாக இருப்பதால், தோல் வறண்டு இறுக்கமாகிவிடும். எனவே, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க மாய்ஸ்சர் பயன்படுத்துவது அவசியம். சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிய முறையை நாங்கள் உங்களுக்கு இங்கே கூறுகிறோம்.

ஹைட்ரேட்டிங் க்ளென்சர்களை பயன்படுத்தவும்

ஹைட்ரேட்டிங் க்ளென்சர் என்பது சருமத்தை வறட்சி ஆக விடாமல் பாதுகாக்கும். டெசில் குளுக்கோசைடு, கோகோ பீடைன், மிரிஸ்டிக் அமிலம் போன்ற மிதமான சர்பாக்டான்ட்கள் இதில் இருந்தால் நல்லது. இது சருமத்தை சுத்தப்படுத்தும் போது சருமத்தை உலர வைக்காமல், மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.

கூடுதல் நீரேற்றத்திற்கு ஹைலூரோனிக் சீரம் சேர்க்கவும்

ஹைலூரோனிக் அமில சீரம் (hyaluronic acid serum) மென்மையான சருமத்தை பெற உதவுகிறது. ஹைலூரோனிக் சீரம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய தோல் பராமரிப்பு சாதனங்களில் ஒன்று. இது சருமத்தை உலர வைக்காமல், நீரேற்ற தன்மையுடன் வைத்திருக்கும்.

10 முதல் 15 kDa வரையிலான ஹைலூரோனிக் அமிலத்தை உபயோகிக்கலாம். இந்த சீரத்தை பயன்படுத்திய பிறகு, பகல் நேரத்தில் மாய்ஸ்சரைசர் மற்றும் பரந்த-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை உபயோகிப்பது நல்லது.

ஜெல் அல்லது நீர் சார்ந்த மாய்ஸ்சரைசருக்குப் பதிலாக மென்மையான மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்

குளிர்காலத்தில் தோல் வகையை அடிப்படையாக கொண்டு, ஸ்க்வாலேன், வெண்ணெய், பாதாம் எண்ணெய்கள் போன்ற பொருட்களுடன் சேர்த்து மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இது குளிர்காலத்தில் சரும வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.

சாப்ட் மற்றும் நீர் சார்ந்த லோஷன்களுக்குப் பதிலாக, தடிமனான, எண்ணெய் சார்ந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், நீர் இயற்கையாகவே ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, தடிமனான மாய்ஸ்சரைசர் வலுவான, நீடித்த மாய்ஸ்சரைசிங் தன்மையை கொண்டிருக்கும்.

எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்

குளிர்காலத்தில் புற ஊதா கதிர்களில் இருந்து தப்பிக்க முடியாது. சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன், வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் ஈரப்பத்தமற்ற காற்று, சருமத்தில் விரிசல், சுருக்கங்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதம் நிலையாக இருக்கும். நானோ மாசு துகள்களின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும் மாசு எதிர்ப்பு சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும்.

மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரைப் பயன்படுத்தவும்

சுத்தமான, ஆரோக்கியமான சருமத்தை பெற Exfoliation முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில், சருமம் இயல்பாகவே வறட்சியாக காணப்படும். எனவே, சருமத்தில் சிவப்பு வடிவ தேமல், தோல் உரிதல், சரும எரிச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடும் தவிர்க்க மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரைப் பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.

Also Read : கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

உதடுகளை பராமரிப்பதும் முக்கியம்

குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் வறண்டு போவதையும், வெடிப்பதையும் தடுக்க, நீங்கள் அவற்றை சரியாகபராமரிக்க வேண்டும். உங்கள் குளிர்கால தோல் பராமரிப்பு கிட்டில் எப்போதும் லிப் ஆயில் அல்லது மென்மையான, மிருதுவான உதடுகளுக்கான பாம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். லிப்பாம் வாங்கும் போது அது சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்குமா என்பதை உறுதிப்படுத்தவும்.

சருமத்திற்கு உடலுக்கு பயன்படுத்தப்படும் வெண்ணெய் சிறந்தது

குளிர்காலம் குறிப்பாக கடுமையானதாக இருக்கும் போது, சருமத்தை மென்மையாக வைத்திருக்க ஒரு எளிய லோஷன் போதுமானதாக இருக்காது. அத்தகைய நேரங்களில் நமக்கு ஒரு மென்மையான body butter தேவை. இது சருமத்தில் ஏற்படும் விரிசல் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும். மேலும், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது.

First published:

Tags: Dry skin, Skincare, Winter