ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சரும துவாரங்களை அகற்ற எளிமையான ஹோம் டிப்ஸ்.. ரிசல்ட் கண்டிப்பா கிடைக்கும்..

சரும துவாரங்களை அகற்ற எளிமையான ஹோம் டிப்ஸ்.. ரிசல்ட் கண்டிப்பா கிடைக்கும்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முகத்தில் சிறு சிறு துவாரங்கள் இருப்பது சாதாரண விஷயம்தான். அதுவே பெரிய அளவில் இருக்கிறது எனில் அது சருமத்தை கடுமையாக சேதப்படுத்தும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முக அழகுக்கு காஸ்ட்லியான காஸ்மெடிக்ஸ், பார்லர் சிகிச்சைகளைவிட, அடிப்படை சருமப் பராமரிப்பான கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங்தான் அவசியம். கிளென்சர் என்பது சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்கை நீக்கிச் சுத்தப்படுத்துவது. டோனர் என்பது சருமத் துவாரங்களை மூடச்செய்து இறுகச் செய்வது. மாய்ஸ்ச்சரைசர் என்பது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பது. இவற்றையெல்லாம் தாண்டி சரும துவாரங்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது.

முகத்தில் சிறு சிறு துவாரங்கள் இருப்பது சாதாரண விஷயம்தான். அதுவே பெரிய அளவில் இருக்கிறது எனில் அது சருமத்தை கடுமையாக சேதப்படுத்தும். அதிக எண்ணெய் சுரப்பது, கீறல்கள், முகப்பருக்கள் என பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

Read More : பற்சிதைவில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் 5 டிப்ஸ்..!

எனவே அவற்றை மறையச் செய்ய சில எளிமையான வீட்டுக்குறிப்புகளை செய்து பாருங்கள்:

வெள்ளரிக்கா மற்றும் எலுமிச்சை : எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாறு இரண்டையும் 1 ஸ்பூன் வீதம் எடுத்து கலந்துகொள்ளுங்கள். பின் பஞ்சில் முக்கி முகத்தில் தடவுங்கள்.
வாழைப்பழம் தோல் : இதில் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதன் தோலை அப்படியே முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.
முல்தானி மிட்டி : இது ஒருவகை களிமண் வகையாகும். முல்தானி மிட்டி எண்ணெய் சுரப்பதை தடுக்க உதவும். அதோடு சருமத் துவாரங்களை மறைக்க உதவும். எனவே அதை கெட்டியான பேஸ்டாக கலந்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.
மஞ்சள் : மஞ்சள் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பொருள். இது சருமத்திற்கும் உகந்தது. கஸ்தூரி மஞ்சள் இருப்பின் அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து பேஸ்டாக குழைத்துக்கொள்ளுங்கள். முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.
ஓட்ஸ் மற்றும் பால் : இது சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவும். அதோடு விரியும் துவாரங்களை குறைத்து இயல்பான சருமத்தை அளிக்கும். எனவே ஓட்ஸ் மற்றும் பால் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு இவ்வாறு செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Skin Care