ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டில் மருதாணி பயன்படுத்தி தலைமுடியை எப்படி கலர் செய்வது..? உங்களுக்கான கைட்லைன்..!

வீட்டில் மருதாணி பயன்படுத்தி தலைமுடியை எப்படி கலர் செய்வது..? உங்களுக்கான கைட்லைன்..!

ஹென்னா ஹேர் கலர்

ஹென்னா ஹேர் கலர்

கலரிங் செய்வதற்கு முன் சல்ஃபேட்- ஃப்ரீ ஷாம்பூ பயன்படுத்துவது ஹேர் க்யூட்டிக்கல்ஸை திறக்க உதவுகிறது. கலரிங் செய்து முடித்த பிறகு கண்டிஷனரை பயன்படுத்துவது திறக்கப்பட ஹேர் க்யூட்டிக்கல்ஸை மூட உதவும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அலுவலத்திற்கு வேலைக்கு செல்லும் 25 வயதுக்குட்பட்டவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கூட தற்போது நரைமுடி என்பது பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.

பொதுவாக முன்பெல்லாம் 50 வயதிற்கு மேல் தான் முடி நரைக்க துவங்கும். ஆனால் தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இளம் வயதினருக்கும் சீக்கிரமே முடி நரைத்து வருகிறது. இதற்கு மோசமான வாழக்கை முறை பழக்கங்கள், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு என பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றோடு சேர்த்து சல்ஃபேட்ஸ், பாராபென்ஸ் உள்ளிட்ட கடும் கெமிக்கல்கள் அடங்கிய ஹேர் கலரிங் டையை பயன்படுத்துவதும் முடி மேலும் வெள்ளையாக வழிவகுக்கிறது.

இதனால் கெமிக்கல்கள் குறைந்த அல்லது கெமிக்கல்கள் அற்ற மாற்று வழிகளை தேடி வரும் நிலையில் ஹென்னா-பேஸ்டு ஹேர் கலரிங்கை பற்றிய தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார் இயற்கை முடி பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்கும் நிறுவனமான சூர்யா பிரேசில்-ன் நிறுவனர் கிளெலியா சிசிலியா ஏஞ்சலோன் (Clelia Cecilia Angelon). முதலில் இயற்கையான கூந்தல் பராமரிப்பிற்காக முடிக்கு ஊட்டமளிக்கும் சீரான ஆரோக்கியமுள்ள உணவுகளை பற்றி பேசி இருக்கிறார். தனது முடி பளபளப்பாகவும், ஆரோக்கியமுடனும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவர் ஆப்பிள், வாழைப்பழங்கள், ப்ளூ பெர்ரிஸ், ஓட்ஸ், மீன் உள்ளிட்ட வைட்டமின் பி6 & பி12 நிறைந்த உணவுகள், கேப்ஸ்யூல் ஷேப்பில் உள்ள ஃபிஷ் ஆயில் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அதே போல முடியின் நிறத்தை தீர்மானிக்கும் இயற்கை நிறமியான மெலனின் உற்பத்தி சீராக இருக்க வேண்டும். இந்த நிறமியின் உற்பத்தி குறையும் போது, முடி கிரே அல்லது ஒயிட்டாக மாறும். இதை தவிர்க்க நேரடி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி, அம்லா, அவகேடோ, டார்க் சாக்லேட், ப்ரோக்கோலி உள்ளிட்டவை உதவுகின்றன என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதாம், முந்திரி, ஃபோலிக் ஆசிட் அடங்கிய உணவுகளை டயட்டில் சேர்ப்பது நரை முடியை எதிர்த்துப் போராட சிறப்பான வழி.

ஏற்கனவே நரைமுடி அதிகம் இருப்பவர்கள் கடும் கெமிக்கல்கள் இருக்கும் ஹேர் டை அல்லது கலரிங்கை நாடாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் நேச்சுரல் ஹேர் டையை தயார் செய்து முயற்சிப்பதே சரியான வழி. ஏனென்றால் கெமிக்கல் டை முடி உதிர்வு உள்ளிட்ட கூந்தல் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். இயற்கை முறை என்றாலே பழங்காலத்திலிருந்தே மருதாணி இலைகள் தான் நமக்கு பிரதானம். மேலும் இது எளிதில் கிடைக்கும் என்பதால் மருதாணி இலைகளை அரைத்து பேஸ்ட்டாக்கி கொண்டு சில மணி நேரங்கள் தலையில் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசுவது நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார் சிசிலியா ஏஞ்சலோன்.

Also Read : Hair Care : தலைக்கு குளிக்கும்போது முடி அதிகமாக கொட்டுதா..? நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் காரணம்..!

ஆனால் மருதாணி லேசான ஆரஞ்சு கலரை முடியில் விட்டு செல்லும், இந்த கலர் பலருக்கும் பிடிக்காது. இன்றைய இளைஞர்கள் ரெடி டூ யூஸ் ஆப்ஷனை பெரிதும் விரும்புகிறார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஹெர்பல்ஸ், காய்கறி சாறுகளின் நன்மையுடன் கூடிய ரெடி டூ யூஸ் மருதாணி க்ரீம் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. எனினும் நேச்சுரல் பிரவுன், பிளாக், காப்ர், சில்வர் ஃபாக்ஸ் உள்ளிட்ட பல கலர்களில் இவை கிடைப்பதால் ஒருவர் தனது தோற்றத்திற்கு ஏற்ற கலரை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். மேலும் தொடர்ந்த அவர் ஹென்னா அடிப்படையிலான பல ஹேர் கலர்கள் உள்ளன. எனினும் இவை கடும் கெமிக்கல்களுடன் வருகின்றன. எனவே ஒருவர் அவற்றை வாங்கும் முன் ஆர்கானிக், நேச்சுரல் மற்றும் வீகன் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளார். மருதாணி முடிக்கு கலர் மட்டும் வழங்குவதில்லை சரியான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

சில வழிகளை பின்பற்றி ஹேர் கலரிங் செய்தால் நீண்ட நாட்களுக்கு கலர் முடியில் நீடித்திருக்கும். குறிப்பாக ஹெர்பல் ஹென்னா கிரீம்ஸ் மோசமான கெமிக்கல்களை கொண்டிருக்காது என்பதால் வெள்ளை முடிகளில் தயக்கமின்றி நன்கு ஆழமாகவே பயன்படுத்தலாம். கலரிங் செய்வதற்கு முன் சல்ஃபேட்- ஃப்ரீ ஷாம்பூ பயன்படுத்துவது ஹேர் க்யூட்டிக்கல்ஸை திறக்க உதவுகிறது. கலரிங் செய்து முடித்த பிறகு கண்டிஷனரை பயன்படுத்துவது திறக்கப்பட ஹேர் க்யூட்டிக்கல்ஸை மூட உதவும். எளிமையாக சொல்வதென்றால் ஹேர் கலரிங் செய்ய கடும் கெமிக்கல் ஹேர் டைக்கு பதில், ஹென்னா அடிப்படையிலான டைகளை பயன்படுத்துங்கள் என்றார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Grey Hair, Hair care, Hair coloring