சிறப்பான மேக்கப் போட்டு கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அதற்கேற்ப சரியான மற்றும் பொருத்தமான மேக்கப் பேஸை (Makeup Base) அமைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மேக்கப்பிற்கு முன் சருமத்தில் செய்யப்படும் ஃபவுண்டேஷன் சரியாக அமைந்தால் ஒரு சிறப்பான மேக்கப்பிற்கான பாதி பணிகளை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
சரியான மேக்கப் டூல் மற்றும் பேஸ் மேக்கப் ப்ராடக்ட்ஸ்களை தேர்ந்தெடுப்பதில் இருந்து சருமத்தை சரியாக பராமரிப்பது வரை அனைத்தும் சரியாக இருந்தால் குறைபாடற்ற பேஸ் மேக்கப்பை எளிதாக செய்யலாம். பிரபல தோல் மருத்துவரான ஆஞ்சல் பந்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். சிறப்பான மேக்கப்பிற்கு சருமத்தை தயார் செய்வது எப்படி என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார். மேக்கப் மென்மையாக மற்றும் குறைபாடற்றதாக இருக்க நாம் நன்கு தயார் செய்யப்பட்ட ஸ்கின்னின் நல்ல அடித்தளத்தை கொண்டிருக்க வேண்டும் என்று கூறி அதற்கான சில வழிமுறைகளையும் ஷேர் செய்துள்ளார்.
அவர் ஷேர் செய்துள்ள ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் கீழே:
ஸ்டெப் 1:
முகத்தை நன்கு சுத்தம் செய்வது என்பது மேக்கப் பயன்பாட்டிற்கு உங்கள் சருமத்தை எவ்வாறு தயார்படுத்துகிறீர்கள் என்பதற்கான முக்கிய பேஸ் மேக்கப் ஸ்டெப்ஸ்களில் ஒன்றாகும். சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையிலான சாஃப்ட் க்ளென்சர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். அதே போல நீங்கள் மேக்கப் பயன்படுத்தி இருந்தால் அதை அகற்ற உங்கள் சரும வகைக்கு ஏற்ற மென்மையான க்ளென்சரை பயன்படுத்துங்கள் மற்றும் கடுமையான ஸ்க்ரப்கள் அல்லது எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஸ்டெப் 2:
முகத்தில் இருக்கும் முடிகள் சில நேரங்களில் குறிப்பாக சைட் லாக்ஸ் அல்லது மேல் உதடு பகுதியில் அப்ளை செய்யப்படும் மேக்கப் ஃபவுண்டேஷனை நீல நிறத்தில் காட்டலாம். எனவே ஜெல் தடவி பின்னர் முகத்தில் கூடுதலாக இருக்கும் முடியை ஷேவ் செய்து அகற்றி கொள்ளுங்கள். எப்போதுமே Dry shave செய்யவேண்டாம் . அதே போல முடி வளர்ந்து இருக்கும் திசையிலேயே ஷேவ் செய்யவும்.
ஸ்டெப் 3:
நியாசினமைட், ஹைலூரோனிக் கெய்ட், சென்டெல்லா ஆசியாட்டிகா போன்ற பொருட்களை கொண்டிருக்கும் விரைவாக உறிஞ்சும் (fast absorbing) தன்மை கொண்ட ஜெல் அல்லது சீரம்களை சருமத்திற்கு பயன்படுத்தவும். இவை உங்கள் சருமத்தை மென்மையாக்க, சருமம் சிவத்தல் மற்றும் சரும எரிச்சலை குறைக்க உதவும்.
View this post on Instagram
ஸ்டெப் 4: (மாய்ஸ்ரைசர் அல்லது சன்ஸ்கிரீன்)
பகல் நேரம்: 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட க்ரீமி சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். சிலிகான் அடிப்படையிலான அல்லது செராமைடு அடிப்படையிலான சன்ஸ்கிரீன்கள் சிறப்பாகச் செயல்படும். மேலும் இது மேக்கப்பை சிரமமின்றிப் பயன்படுத்துவதை எளிதாக்கும்.
இரவு நேரம்: செராமைட்ஸ் அடங்கிய மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் ஷியா பட்டர் அல்லது கோகோ பட்டர் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி பாருங்கள். முகம் மற்றும் கழுத்தில் நன்கு தாராளமாக எடுத்து அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Also Read : நத்தையின் உமிழ்நீரை பயன்படுத்தும் கொரிய சருமப் பராமரிப்புகள்.. அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
ஸ்டெப் 5:
கண்களுக்குக் கீழே உள்ள சருமம் எப்போதும் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். கண்களுக்குக் கீழே கன்சீலர் அல்லது ஃபவுண்டேஷன் படர்வதை முற்றிலும் தடுக்க முடியாது. என்றாலும், மாய்ஸ்சரைசிங் அல்லது ஹைட்ரேட்டிங் ஐ க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் இதை குறைக்கலாம்.
ஸ்டெப் 6:
ஹைட்ரேட்டிங் லிப் பாம் உபயோகிப்பது லிப்ஸ்டிக்கை உதடுகளில் சீராக பயன்படுத்த உதவுகிறது. நீங்கள் நீண்ட நேரம் நீடிக்கும் வகையிலான matte lipstick போட்டிருந்தாலும் கூட, உங்கள் உதடுகளில் வெடிப்பு அல்லது விரிசல் ஏற்படுவதை தடுக்க ஒரு லிப் பாம் அப்ளை செய்வது சிறந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Makeup, Skincare