எப்போதும் இளமையான தோற்றத்தை பெற வேண்டுமா? 53 வயதான நடிகை மாதுரி தீட்சித்தின் ஸ்கின்கேர் டிப்ஸை பாலோ பண்ணுங்க!

மாதுரி தீட்சித்

தனது அழகு மற்றும் கவர்ச்சியால் திரைப்படங்கள் மற்றும் அவரது நிஜ வாழ்க்கை இரண்டிலும் எப்போதும் பிசியாக இருக்கிறார்

  • Share this:
53 வயதிலும் நடிகை தனது இளமை தோற்றதால் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வயதை மீறிய ஒரு நடிகை இருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி மாதுரி தீட்சித் தான். பல்துறை நடனக் கலைஞரும் திறமையான நடிகையுமான மாதுரி தீட்சித் தனது அழகு மற்றும் கவர்ச்சியால் திரைப்படங்கள் மற்றும் அவரது நிஜ வாழ்க்கை இரண்டிலும் எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் எளிதாகப் பின்தொடரக்கூடிய சரும பராமரிப்பு குறிப்புகளை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். அந்த டிப்ஸ் குறைபாடற்ற மற்றும் கதிரியக்க சருமத்தை பராமரிக்க உதவும். மேலும் அந்த வீடியோவில் தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகளை இன்டெர்னல் மற்றும் எக்ஸ்டெர்னல் என இரண்டு காரணிகளாகப் பிரித்தார். நடிகை மாதுரியின் கூற்றுப்படி, நீங்கள் சாப்பிடுவதும் குடிப்பதும் இன்டெர்னல். ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பின்பற்ற அவர் கூறும் சில இன்டெர்னல் டிப்ஸ் குறித்து முதலில் காண்போம்.

1. தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்: நீர் நச்சுகளை கழுவ உதவுகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இதன் விளைவாக சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

2. எண்ணெய் நிறைந்த உணவைத் தவிர்க்கவும்: பல்வேறு வகையான எண்ணெய் சருமத்தில் சேகரிக்கப்பட்டு துளைகளை அடைக்கிறது. இது முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.3. சர்க்கரை வேண்டாம் என்று சொல்லுங்கள்: ‘பருக்கள் மற்றும் பிரேக்அவுட்டுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று சர்க்கரை’, என்று அவர் தனது வீடியோவில் சுட்டிக்காட்டினார். அதிக அளவு குளுக்கோஸ் சருமத்தை எரிச்சலூட்டுவதோடு முகப்பருக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

4. ஜூஸ்களை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிட வேண்டும்: ஒரு முழு பழத்தில் உள்ள நார்ச்சத்து அளவு ஒரு கிளாஸ் ஜூஸை விட மிகவும் அதிகமாக இருக்கும் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும். எனவே, ஜூஸ் உட்கொள்வதை விட அவற்றை அப்படியே சாப்பிடுவது சிறந்தது என்று நடிகை பகிர்ந்து கொண்டார்.5. சரியான தூக்கம் வேண்டும்: ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது தோல் செல்கள் மீண்டும் உருவாக உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உதவியாக இருக்கும்.

6. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் சருமத்தை பளபளப்பாக்குவதற்கான சிறந்த வழி ஒர்கவுட் செய்வது. இது உங்கள் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதால் தோல் சிக்கல்களைத் தடுக்கும்.

சருமத்திற்கு அழகு சேர்க்கும் கருப்பு மிளகு எண்ணெய்...எப்படி பயன்படுத்த வேண்டும்..? நன்மைகள் என்ன?

இதையடுத்து எக்ஸ்டர்னல் பிரிவின் கீழ், மாதுரி பல்வேறு தயாரிப்புகளின் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை அடைய ஒரு வழக்கத்தை பின்பற்றுவது குறித்து வீடியோ பதிவில் பேசியுள்ளார். மேலும் எப்போதும் சுத்தமான தோலுடன் தூங்க வேண்டும் என்பதையும், மேக்கப் முகத்துடன் ஒருபோதும் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.உங்கள் முகத்தை சுத்தப்படுத்துவதற்கான காலை நேர தோல் பராமரிப்பு வழக்கம்:

1. கிளீன்சர்
2. ஆல்கஹால் இல்லாத டோனர்
3. மாய்ஸ்ச்சரைசர்
4. SPF

இரவு நேர தோல் பராமரிப்பு வழக்கம்:

1. மேக்-அப்பை நீக்குதல்
2. கிளீன்சர்
3. டோனர்
4. வைட்டமின் சி சீரம் (இரவில் மட்டுமே)
5. மாய்ஸ்ச்சரைசர்

இந்த தயாரிப்புகள் அனைத்தும் மேல்நோக்கிய இயக்கத்தில் முகத்திலும் கழுத்திலும் மசாஜ் செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல ஒருவர் தனது கழுத்து மற்றும் கைகளை மாய்ஸ்ச்சரைசிங் செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்த பகுதிகளை சுத்தம் செய்து மாய்ஸ்ச்சராக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால் அவை வயதான சருமத்திற்கு மிக முக்கியம். பெரும்பாலான மக்கள் அவற்றை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தோல் பராமரிப்பு வழக்கைத்தை பின்பற்றினாலே போதும் மாதுரி போல எப்போதும் இளமையான தோற்றத்தை நீங்களும் பெறலாம்.

 
Published by:Sivaranjani E
First published: