என்ன தான் ஆசை ஆசையாய் பேன்ஸி ஸ்டோர்களில் ஆரம்பித்து ஆன்லைன்ஸ்டோர்கள் வரை பார்த்து பார்த்து பல கலர்களில் லிப்ஸ்டிக்குகளைவாங்கினாலும், ஒரு பெண்ணால் அவை அனைத்தையும் பயன்படுத்த முடியாது.ஆம், சில வண்ணங்களை மிகவும் பிடித்துப்போய் வாங்கியிருந்தாலும் பலநாட்கள் பயன்படுத்தாமலே வைத்திருப்போம்.
ஒருநாள் அந்த லிப்ஸ்டிக்கைதிறந்து பார்த்தால் காய்ந்து போய் இருக்கும். அப்போது உங்களிடம் இருக்கும் ஒரே சாய்ஸ் அந்த லிப்ஸ்டிக்கை தூக்கி எறிவதாக தான் இருக்கும். ஆனால் இங்கே நீங்கள் காசு கொடுத்து வாங்கிய உதட்டு சாயங்களுக்கு மீண்டும் உயிர்ப்பிக்க கூடிய வழிகளை கொடுத்துள்ளோம்.
BlushBee Organic Beauty இன் நிறுவனர் ஷோபனா நவநீதன், பழைய மற்றும் காய்ந்த லிப்ஸ்டிக்குகளை புதுப்பிப்பது குறித்து கொடுத்துள்ள சில ஹேக்குகளை பற்றி பார்க்கலாம்...
தேங்காய் எண்ணெய்:
சருமத்தைப் போலவே தேங்காய் எண்ணெய் காய்ந்து போன லிப்ஸ்டிக்குகள் மீது அற்புதம் செய்யக்கூடியது. உலர்ந்து போன உதட்டுச்சாயத்தில் சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, நன்றாக குலுக்கவும். சில நிமிடங்களிலேயே உங்கள் லிப்ஸ்டிக் புத்துயிர் பெறுவதை காணலாம்.
உலர்ந்த லிப்ஸ்டிக்கை சூடாக்கலாம்:
காய்ந்த லிப்ஸ்டிக்கை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு, மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடத்திற்கு சூடாக்கவும். இப்போது காய்ந்து போன லிப்ஸ்டிக் நன்றாக உருகி இருக்கும். இதனை ஒரு சுத்தமான கன்டெய்னரில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.
ப்ளோ ட்ரையர் பயன்படுத்தலாம்:
உங்கள் லிப்ஸ்டிக் காய்ந்துவிட்டால் அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ப்ளோ ட்ரையரைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக்கை ப்ளோ ட்ரையை பயன்படுத்தி சூடாக்கினால், அது உருவதை காணலாம். இதுவும் உலர்ந்த லிப்ஸ்டிக்கை சரி செய்ய நல்ல வழியாகும்.
உங்கள் கன்னம் பளபளப்பாக மாறுவதற்கு பப்பாளி மற்றும் கற்றாழை மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள்.!
லிப் கிளாஸை சேருங்கள்:
குங்குமப்பூ எண்ணெய், சோயா மெழுகு, தாவர எண்ணெய் அடிப்படையிலான பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றில் ஒன்றுடன் உலர்ந்த லிப்ஸ்டிக்கை சேர்த்து உதட்டு தூரிகை மூலம் கலக்கவும். நன்றாக கலக்கும் போது உருவாகும் வெப்பம், உலர்ந்த உதட்டுச்சாயம் கட்டிகள் இல்லாமல் கலக்க உதவும்.
லிப்ஸ்டிக் கறை:
வழக்கமாக லிப்ஸ்டிக் அணிந்த பிறகு காபி குடித்தாலோ, எதையாவது சாப்பிட்டாலோ பல் மற்றும் குவளையில் உதட்டுச் சாயம் படித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை தவிர்க்க, ப்ளாட்டிங் பேப்பரை எடுத்து அதை உங்கள் உதடுகளுக்கு மீது லேசாக அழுத்தி அதிகப்படியான அல்லது வெடித்த நிறத்தை அகற்றவும். இன்னும் கொஞ்சம் வண்ணத்தை மீண்டும் தடவினால், உதட்டில் உள்ள லிப்ஸ்டிக் கறையாக எங்கும் படியாது.
லிப் பாம்:
காய்ந்த லிப்ஸ்டிக்கை மைக்ரோவேவ் அவனில் உருக்கி, உங்களுக்கு பிடித்த லிப் பாமுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை ஒரு சுத்தமான கன்டெய்னரில் சேகரித்து, குளிரூட்டி பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த நிறத்தில் லிப் பாம் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.