நாம் அனைவரும் பருக்கள் இல்லாத ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற ஆசைப்படுவோம். ஆனால், வேலைப்பளு காரணமாக நமது சருமத்தை பராமரிக்க நமக்கு நேரம் இல்லை. இதனால், சிறு வயதிலேயே முதுமையான தோற்றத்தை பெறுகிறோம். இயற்கையாக கிடைக்கும் சில பழங்கள் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வெறும் ஒரு 20 நிமிடம் கிடைத்தால் போதும், உங்கள் முகத்தை ஆரோக்கியமாக மாத்தலாம்.
தேங்காப்பால், சரும ஆரோக்கித்திற்கு தேவையான அதிக சத்துக்களை கொண்டுள்ளது. எனவே, உங்கள் சருமத்தை கண்ணாடி போல பளபளப்பாக்க தேங்காப்பால், பாதாம் மற்றும் தேன் வைத்து ஒரு சூப்பரான பேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காப்பால் - 2 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
பாதாம் - அரை கப்
பேஸ் பேக் தயார் செய்ய - 1 கிண்ணம்
செய்முறை :
> ஒரு கிண்ணத்தில் அரை கப் பாதாமை போட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
> பின்னர், அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
> மையாக அரைத்த பாதாமில், 2 ஸ்பூன் தேங்காப்பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸி 10 நொடிகள் அரைக்கவும்.
> இப்போது, இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்தால், சரும பொலிவுக்கு உதவும் பேஸ் பேக் ரெடி.
Also Read | கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!
எப்படி பயன்படுத்துவது?
முதலில், உங்கள் முகத்தை சோப்பு அல்லது Face wash வைத்து நன்றாக சுத்தம் செய்யவும்.
இப்போது, முறையாக தயாரிக்கப்பட்ட இந்த பேஸ் பேக்கை, ஒரு மெல்லிசான ப்ரெஷ் மூலம் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
ஒரு 10 நிமிடம் கழித்து நன்றாக உலர்ந்ததும், குளிர்ந்த நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இதை, வாரம் 3 முறை பயன்படுத்தினால் 7 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள் :
இந்த பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய்ப்பாலில் அதிக அளவு காப்பர் உள்ளது. இது, சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின்கள் பளபளக்கும் சருமம் பெற உதவுகிறது.
பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேன், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும். மேலும், சருமத்தின் தளர்வுகளை கட்டுப்படுத்தி இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது.
பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் பாதாம், வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக உள்ளது. இந்த வைட்டமின் சருமத்தின் இயற்கை பொலிவை மீட்டு தர உதவுகிறது. அதுமட்டும் அல்ல, பதாமில் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் சரும தடிப்புகளை தடுக்கிறது.
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் சருமத்திற்கு தேனை பயன்படுத்துகையில், சரும ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, குறிப்புகளை பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face pack, Skin Care